Page Nav

HIDE

Breaking News:

latest

முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்க்ஷவுடன் மிக முக்கிய சந்திப்பு

கொழும்பில் இருந்து புத்தளம், இளவன்குளம் ஊடாக மன்னார், யாழ்ப்பாணம், செல்லும் பாதையை திறப்பது தொடர்பான மிகவும் முக்கியமான கலந்துரையாடல் நீதி அ...

கொழும்பில் இருந்து புத்தளம், இளவன்குளம் ஊடாக மன்னார், யாழ்ப்பாணம், செல்லும் பாதையை திறப்பது தொடர்பான மிகவும் முக்கியமான கலந்துரையாடல் நீதி அமைச்சர் விஜயதாஜ ராஜபக்க்ஷ மற்றும் முஸ்லிம்பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் நடைபெற்றது


இந்த சந்திப்பானது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான உனைஸ் பாரூக் அவர்களின் உருங்கினைப்பில் இலங்கை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று (23)மதியம் 12.மணியளவில் நடைபெற்றது

இந்த நிகழ்வில் தற்போதைய நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்க்ஷ முன்னாள் நிதி அமைச்சரும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம்,  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன், போன்றவர்கள் மிகவும் முக்கியமாக கலந்து கொண்டார்கள்

இந்த கலந்துரையாடலில் யுத்தத்திற்கு முற்பட்ட காலங்களில் மன்னார், யாழ்ப்பாணம் போன்ற வடபகுதியிலிருந்து கொழும்புக்கான போக்குவரத்தின் பிரதான பாதையாக காணப்பட்ட வங்காலை, அரிப்புத்துறை, சிலாவத்துறை, இளவன்குளம், புத்தளம், ஊடாக கொழும்பு செல்லும் பாதை திறக்கப்படாமல் அதன் மீது வழக்கு போடப்பட்டுள்ளது  எதிர்காலத்தில் இந்த வழக்குகளில் வெற்றி பெற்று  வடபகுதி மக்களின் பொருளாதாரத்தை எவ்வாறு உயர்த்த முடியும் என்ற கலந்துரையாடல்கள் நடைபெற்றது

மேலும் இந்த நிகழ்வில் சட்டத்தரணிகள் பொறியியலாளர்கள் வைத்தியர்கள் முசலி பிரதேச சமூக செயற்பாட்டாளர்கள் மௌலவிகள் என்று பலரும் கலந்து கொண்டார்கள்

விரைவாக அபிவிருத்தியடையும் 

கலந்துரையாடலின் போது இந்த அமைப்பின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி உனைஸ் பாறூக் அவர்களினால் வருகை தந்த குழுவினருக்கு குறித்த பாதை ஊடாக  கொழும்பிலிருந்து புத்தளம்இ இலவன்குளம்இ  மரிச்சுக்கட்டிஇ அரிப்புஇ நானாட்டான்இதள்ளாடிஇ ஊடாக  யாழ்ப்பாணம் வரை செல்லக்கூடிய ஒரு பாதையாகும் என்பதையும் இதன் மூலம் மக்களின்   சமூகஇ  பொருளாதாரஇ   கலாச்சாரதுறைஇ முன்னேற்றமடையும்  என்பவற்றுடன்  இந்த பாதை முக்கியத்துவம் போன்றவை எடுத்துக் கூறப்பட்டது.

மிகவும் குறைந்த தூரம் 

மேலும் இப்பகுதியில் உள்ள  விசேட புனித தலங்களான திருக்கேதீஸ்வரம். மடு தேவாலயம். போன்றவற்றிற்கு தென்பகுதியில் இருந்து வருகின்ற பக்தர்கள் செல்வதற்கு மிக இலகுவான வழி என்ற விடயத்தையும் அதே போன்று இலவங்குளம் பகுதியிலிருந்து புத்தளம் செல்வதற்கு வெறுமனே  35 கிலோமீட்டர் ஆனால் நாங்கள் தற்போது பாவிக்கின்ற  கிட்டத்தட்ட அதிலிருந்து ஆறு மடங்கு 240 கிலோமீட்டர் அதிகமான தூரம்  என்ற விடயமும் அங்கு சுட்டிக்காட்டப்பட்டது

களவிஜயம் 

கூட்டம் நிறைவு பெற்றதும் குறிப்பிட்ட பகுதிகளுக்கு  நேரடியான கள விஜயத்தினை  அமைச்சரின்  குழு மேற்கொண்டு  சட்டத்தரணி உனைஸ் பாறூக்  அவர்களிடமும்  ஏனையவர்களிடமும் வில்பத்து  பாதை ஊடாக சென்று மேலதிக விவரங்களை அதிகாரிகள்  அறிந்து கொண்டனர்

மேலும் இந்த வீதி திறப்பில் உள்ள தடைகளை அகற்றி அமைச்சர் விஜயதாச ராஜபக்சே முன் நின்று செயல்படுவார் என்று நம்பிக்கை இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான உனைஸ் பாறூக் அவர்கள்  தெரிவித்தார்



No comments