Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னார் மாவட்டத்தில் சிறப்பான கல்வி பணியாற்றி ஓய்வு பெறுகின்றார் மேரி ஏஞ்சலா ஆசிரியை

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் கடமையுணர்வுடனும் அன்பு கலந்த வழிகாட்டடுதலுடனும் கற்பித்த இரக்க உணர்வு   கொண்ட ஆசிரியர் மேரி எ...

மன்னார் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பாடசாலைகளில் கடமையுணர்வுடனும் அன்பு கலந்த வழிகாட்டடுதலுடனும் கற்பித்த இரக்க உணர்வு   கொண்ட ஆசிரியர் மேரி எஞ்சலா கல்வி பணியில் இருந்து இவ்வருடம் ஓய்வு பெற்றுச்செல்கிறார். 

அந்தோனிமுத்து மேரி ஏஞ்சலா மன்னார் மண்ணின் முருங்கன் பிரதேசத்தில் கற்கிடந்தகுளம் பகுதியில் அந்தோனி இசிதோர் கொடுதோர் மற்றும் அன்னம்மாவிற்கு மூத்த மகளாக 1964 ஆண்டு  பிறந்தார். 

தாயின் வளர்ப்பில் சிறு வயதில் யாழ்ப்பாண மிருசுவில் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் ஆரம்ப கல்வியையும் பின்னர் உயர் கல்வியை மன் / புனித சவேரியார் பெண்கள் பாடசாலையிலும் மேரி ஏஞ்சலா கற்றிருந்தார்

ஆசிரியை கல்வி கற்ற பாடசாலைகள்

தான் கல்வி கற்ற மன்/புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இருந்தே யாழ்ப்பாண  பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டு அறப்பணி எனப்போற்றப்படுகின்ற ஆசிரியப்பணியிலே புவியியல் பட்டதாரியாக முதல் நியமனத்தை  யுத்த காலத்தில் மன்/ ஆண்டான்குள றோமன் கத்தோலிக்க பாடசாலையிலும், அதன் பின்னர் பரிகாரிகண்டல் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும்  பின்னர் முருங்கன் மத்திய மகா வித்தியாலயத்திலும், மன்/ சித்திவிநாயகர் இந்து கல்லூரியிலும்,புனித வளனார் ம.வி,மன்/ கரிசல் றோ.க.த பாடசாலை , மன் அல் அஸ்கார் தேசிய பாடசாலை, மன் / எருக்கலம்பிட்டி மகளிர் ம.வி என பல பாடசாலைகளில் கல்வி பணியை ஆற்றியிருக்கின்றார்

60 வருட தனித்துவம் மிக்க சேவையினை மன்னார் மாவட்டத்திற்கு வழங்கி தனது 60 வது வயதில் தான்  தான் கல்வி கற்ற மன்/ புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் தனது 35 வருட பூர்த்தியுடன்  ஆசியப்பணிக்கு விடை கொடுக்கின்றார். 

அது மட்டும் இல்லாது இவர்  மன்னார் மாவட்டத்தில் ஆசிரியர் கலாசாலை இயங்கியபோது அதில்  விரிவுரையாளரகவும் பின்னர் தேசிய கல்வி நிறுவகத்தின் கல்விமானி பட்டப்பிரிவின் விரிவுரையாளராகவும் செயற்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

பிரதானமாக 2014 ஆண்டின் கல்வி அமைச்சின் சிறந்த ஆசிரியருக்கான விருதான குரு பிரதீபாபிரபா விருதையும் பெற்று கொண்டுள்ளார்.

அர்பணிப்புடனும் திருப்தியுடனும் செயற்பட்டார்

கல்வி பணியில் ஓய்வுக்காலம் அண்மிக்கும் வரையிலும் விடா முயற்சியுடன் அர்பணிப்புடனும் திருப்தியுடனும் முழுமையாக கல்வி பணியில் ஈடுபட்ட மேரி

ஏஞ்சலா போன்ற ஆசிரியர்கள் எமது மாவட்டத்துக்கு கிடைத்த வரமே. 

வெறுமனே பட்டதாரி ஆசிரியராக மட்டும் இல்லாது  தன் கல்வித்தரங்களை  PGDE, MA ,M. Ed  வரை உயர்த்தி பட்டங்களை தம் வசப்படுத்தியிருக்கிறார். 

அத்துடன் அவரின் கல்வி முன்னேற்றத்தில் அவருடன்  கற்பித்து பின்னர் மடு, துணுக்காய் கல்விப்பணிப்பாளராக இருந்த திருமதி மாலினி வெனிற்றனின் பல்வேறு ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கிய ஒருவராக இருந்தார் என தெரிவிக்கும் மேரி ஏஞ்சலா 

 தான் கற்பிக்க காலத்தில் கற்பித்தல் செயற்பாட்டில் எந்த ஒரு அழுத்தம்க்களையும் வழங்காது சிறந்த ஒத்துளைப்புக்களை வழங்கிய அதிபர்கள் ,ஆசிரியர்கள் குறிப்பாக வலயக்கல்விப்பணிப்பாளர்கள் ஆபேல் றெவல், சுகந்தி செபஸ்ரியன் ஆகியோருக்கு தனது நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்துள்ளார்.

மிகவும் சிரமங்கள் மத்தியில் வியர்வை சிந்தி கற்பித்த அவரின் தந்தையின் உழைப்பினாலும் தாயின் அரவனைப்பினாலும் இன்று பல பிள்ளைகளுக்கு கல்வி தாயாகி இருக்கின்றார் மேரி ஏஞ்சலா

வெறுமனே கற்பித்தல் மாத்திரம் இல்லாமல் தனது கற்பித்தல் காலங்களில் மாணவர்களோடு அன்பாகவும் நட்பாகவும் பழகுவதுடன் பல்வேறு மாணவர்கள் சமூக விஞ்ஞான பாட பிரிவில் சிறப்பான பெறுபேறுகளை பெற  சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்துள்ளார் மேரி ஏஞ்சலா

ஆசிரியை ஓய்வு

தன் பணிக்காலங்களிலே கடமையை சிறப்புற செவ்வனே மேற்கொண்ட மேரி ஏஞ்சலா இன்று (2024.07.01 ) தனது அறுபதாவது அகவையில் மணி விழா காணுகின்றார். 

காலநதியோட்டத்தில் அகவை 60ல் ஓய்வு பெறுவது அவரது தொழில் பற்றினை எடுத்துக்காட்டுகின்றது. ஓய்வு காலத்தில் குடும்பத்துடன் நோய் நொடிகள் அற்ற வாழ்க்கை வாழ மன்னார் மாவட்ட மக்கள் சார்பாகவும் எமது ஊடகம் சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கின்றோம்


No comments