Page Nav

HIDE

Breaking News:

latest

வறுமையிலும் விளையாட்டில் சாதனை படைக்கும் மன்னார் மாணவி

வறுமை பொருளாதாரப் பிரச்சனைகளிலும்  மன்னார் டாவட்டத்தில் தட்சணாமருதமடு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி  தொடர்ந்து வரலாற்றுச் சாதனைகள...

வறுமை பொருளாதாரப் பிரச்சனைகளிலும்  மன்னார் டாவட்டத்தில் தட்சணாமருதமடு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி  தொடர்ந்து வரலாற்றுச் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றார் 

அந்த வகையில் 2024 ம் ஆண்டுக்கான மாகாண மட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியில் மன்/தட்சணா மருதமடு மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவி யோகேஸ்வரன் சுடர்மதி மீண்டும் இரண்டு வரலாற்று சாதனையினை நிகழ்த்தி மடு வலயத்திற்கு பெருமையீட்டிக் கொடுத்திருக்கின்றார். 

கடந்த 20ம் திகதி தொடக்கம் 24ம் திகதி வரை இடம்பெற்ற மாகாணமட்ட திறனாய்வு போட்டியில் 18 வயதின் கீழ் பெண்களுக்கான 400ஆ சட்டவேலி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்த 1:12:90 நிமிடங்களில் ஓடி முடித்த சாதனையை முறியடித்து 1:11:90 நிமிடங்களில் ஓடி முடித்து புதிய சாதனையை நிகழ்த்திய தோடு 100ஆ சட்டவேலி நிகழ்ச்சியில் கடந்த ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டிருந்த 17:03 வினாடிகளை முறியடித்து அதனை 16:90 வினாடிகளில் ஓடி முடித்து இரு நிகழ்வுகளிலும் புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து 200ஆ ஓட்ட நிகழ்வில் இரண்டாம் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் வடமாகாணத்தில் 18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் 725 புள்ளிகளை பெற்று சிறந்த வீராங்கனைக்கான விருதினையும் பெற்றுக்கொண்டார்.

இது முதல் முறையல்ல .கடந்த வருடம் இடம்பெற்ற மாகாணமட்ட மெய்வல்லுனர் திறனாய்வு போட்டியிலும் 300 ஆ சட்டவேலி நிகழ்வில் புதிய சாதனையை நிகழ்த்தியதோடு சிறந்த வீராங்கனைக்கான விருதை பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

இதுமட்டுமல்லாது இம்மாணவி மாகாணமட்ட தைக்கொண்டோ (வுயநமறழனெழ) போட்டியில் 18 வயதின் கீழ் பெண்கள் 52-55 முப எடைக்கு உட்பட்ட பிரிவில் கலந்து கொண்டு முதல் இடத்தை பெற்றுக் கொண்டதுடன் கடற்கரை கரப்பந்து  (BeachVolleyball)  போட்டியிலும் கலந்து கொண்டு கடுமையான போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டது  இப்பாடசாலையின்

மேலுமொரு சாதனையாக 14 வயதிற்குட்பட்ட பெண்கள் பிரிவில் 80ஆ சட்டவேலி ஒட்டத்தில் சு.வர்ஷாலினி ஏற்கனவே நிகழ்த்தப்பட்ட 15.02 வினாடிகள் சாதனையை முறியடித்து 14.6 வினாடிகளில் ஓடி பழைய சாதனையினை முறியடித்து கடும் போட்டிக்கு மத்தியில் இரண்டாம் இடத்தினை தழுவிக்கொண்டார்.

யு.நிஷோலினி 400M ஓட்ட நிகழ்வில் 3ம் இடத்தினையும் P.வினுசிகா 80M சட்டவேலி ஓட்டத்தில் 4ம் இடத்தினையும் மு.கோணிலா ஈட்டி எறிதலில் 5ம் இடத்தினையும் ளS.அபிசா 400M ஓட்டப் போட்டியில் 5ம் இடத்தையும் பெற்று வட மாகாணத்தில் அதிகூடிய பத்து பாடசாலைகளில்  இந்த  பாடசாலை பெண்கள் பிரிவில் 6ம் இடத்தை பெற்று மடு வலயத்திற்கு பெருமையீட்டிக்கொடுத்த பாடசாலையாக திறன்பட்டு விளங்குகின்றது.

2024ம் ஆண்டுக்கான மாகாண மட்ட பெரு விளையாட்டுக்களில் மன்-தட்சணாமருதமடு மகாவித்தியாலய பாடசாலைக்கு கிடைத்த வெற்றிகளாக தை கொண்டோ போட்டியில் 4 தங்கப்பதக்கங்களும் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் ஓர் வெண்கலப் பதக்கமும் கிடைக்கப் பெற்றதோடுஇ கடற்கரை கரப்பந்து மற்றும் கரப்பந்து போட்டிகள் இரண்டிலும் 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

மேலும் 2024 ஆம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகின்ற நிலையிலே தொடர்ச்சியாக தட்சணாமருதமடு மகாவித்தியாலயம் பல்வேறு வெற்றிகளை பெற்று மடு கல்வி வலயத்திற்கும்   மன்னார் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றது. 


பாடசாலையில் வளப்பற்றாக்குறை

ஆளணி பற்றாக்குறை பௌதீகவள பற்றாக்குறை என பல்வேறு விதமான பற்றாக்குறைகளுக்கு மத்தியிலே ஒரு குறிப்பிட்ட சொற்ப மாணவர்களை கொண்ட இந்த பாடசாலை மிகப்பெரிய பலம் பொருந்திய பாடசாலைகளுடன் போட்டி போட்டு சாதனைகளை புரிந்து வருகின்றது.

2024 ஆம் ஆண்டுக்கான மடுவலய விளையாட்டுப் போட்டியிலே பல முன்னணி பாடசாலைகளை வீழ்த்தி இரண்டாம் இடத்தை பெற்றுக்கொண்ட இப்பாடசாலையானது மாகாணமட்ட போட்டிகளிலும் சாதனையை நிகழ்த்தி வருகிறது.

கடந்த தரடல 13இ14 ம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நடந்த மாகாணமட்ட தைகொண்டோ (வநயமறழனெழ) போட்டியிலே நான்கு முதலாம் இடங்கள் ஒரு இரண்டாம் இடம் ஒரு மூன்றாம் இடம் என  மிகப்பெரிய சாதனை நிகழ்த்தியது .

அதே போன்று   இந்த வருடத்தின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்ற   கரப்பந்தாட்ட  போட்டியிலும் மாகாண மட்டத்திலே இரண்டாம் இடத்தை பெற்று சாதனையை புரிந்துள்ளது. மிகப் பலம் பொருந்திய அணிகளுடன் மோதி தட்சணாமருதமடு 18 வயதின்கீழ் பெண்கள் அணியானது மாகாண மட்டத்திலே இரண்டாம் இடத்தைப் பெற்று சாதனைகளை புரிந்துள்ளது. 

மிகுந்த சவால்களுக்கு மத்தியிலும்  அவர்களது அதீத திறன்களை வெளிப்படுத்தி வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பாடசாலைச் சமூகத்திற்கும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்




 

No comments