Page Nav

HIDE

Breaking News:

latest

ஈழத்தமிழர் வரலாற்று, தொல்லியல் ஆய்வுகளில் தடம் பதித்த வாழ்நாள் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்

மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்த தமிழர்களின்  தொன்மை வரலாற்றை தொல்லியல் ஆய்வுகள் மூலம்  ஆதார பூர்வமாக மீள் உருவாக்கிய வரலாற்று,தொல்லியல்...

மறுக்கப்பட்டும் மறைக்கப்பட்டும் வந்த தமிழர்களின்  தொன்மை வரலாற்றை தொல்லியல் ஆய்வுகள் மூலம்  ஆதார பூர்வமாக மீள் உருவாக்கிய வரலாற்று,தொல்லியல்துறை  மேனாள் தலைவரும், யாழ் மத்திய கலாச்சார நிதியத்தின் இணைப்பாளருமான  சிரேஸ்ட பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம்  அவர்கள் பல வழிகளிலும் இந்த உலகத்திற்கு அதன் உண்மைத் தன்மைகளை வெளிப்படுத்தியுள்ளார் 


புகைப்படர்ந்திருந்த வட இலங்கைத் தமிழரின் வரலாற்றுக்கு புது வெளிச்சம் பாய்ச்சி தமிழரின்  தொன்மையான இருப்பை தொல்லியல், வரலாற்றாய்வின் மூலம் தக்க வைத்திருக்கிறார்

அந்த வகையில் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள்தொடர்பான சிறு   குறிப்பினை  பொது மக்களுடன் பகிர்ந்து கொள்கிறோம் 

ஈழத்து தொல்லியல் அகழ்வாய்வுகளும் - பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்களும்  

சிரேஷ்ட பேராசிரியர் பரமு புஸ்பரட்ணம் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வரலாற்றுத்துறையில் தொல்லியல் இணைப்பாளராக கடமையாற்றி வருகிறார்கள்  வடமாகாணத்தின் மத்திய கலாசார நிதியம் பணிப்பாளர் மற்றும் இலங்கை தொல்லியல் திணைக்களம் யாழ்ப்பாணக் கோட்டை மேல் புனரமைப்புதிட்டத்தின் பிரதான ஆலோசகர்கள் ஒருவராவார்.

தென் ஆசியாவின் தலைசிறந்த தொல்லியல் அறிஞர்கள் ஒருவரான பேராசிரியர் சுப்பராயலுவின் வழிகாட்டலில் தனது கலாநிதிப் பட்டத்தை பெற்றவர் 

தமிழரின் பூர்வீக வரலாற்று தொல்லியல் அகழாய்வு மூலம் வெளிக்கொண்டு வர அயராது உழைத்துவரும் இவர் அந்த அகழ்வாய்வுகள் மூலம் முன்வைத்த முடிவுகள் பலவும் இன்று அறிஞர்கள் பலரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன 

தொல்லியல், கல்வெட்டியல், நாணயவியல், வரலாற்றியல், சுற்றுலாவியல் போன்றவற்றில் அதித ஈடுபாடு கொண்டவர்

பேராசிரியர் புஷ்பரட்ணம் மேற்கொண்ட தொல்லியல் அகழ்வாய்வுகளாக 

*பூநகரி 

*வேலனை 

*முள்ளியான் பளை

*பெரியபுளியங்குளம் 

*செட்டிகுளம் 

*கப்பாச்சி 

*கட்டுக்கரை 

*நாகபடுவான் 

*திருமங்களாய் (திருகோணமலை ) 

*செட்டிகுளம் 

*கொங்குமணமலை 

*கட்டைக்காடு

*வெற்றிலைக்கேணி 

*வரணி

*பனங்காமம் 

*மட்டக்களப்பு 

*சாட்டி

*குசாளன்மலை

*யாழ்ப்பாணகோட்டை

*வெருகல்

*திருகோணமலை 

*தம்பலகாமம் 

*கோடாளிபரிச்சான்

*குமரன்கடவை

*பனிக்கன்குளம்

போன்ற இடங்களில் தொல்லியல் அகழ்வாய்வுகளை  மேற்கொண்டு அவ்வகழ்வாய்வுகள் மூலம் இலங்கைத் தமிழர் வரலாற்றுக் புதுவெளிச்சம் பாச்சியுள்ளார்

இதனைவிட 

&கந்தரோடை

&கச்சாய் 

&கண்ணாடிப்பிட்டி 

&வல்லிபுரம் 

&பனிக்கன்குளம்

&வெற்றிலைக்கேணி 

&மணற்காடு 

&பாண்டியன்குளம் 

&மாந்தை மேற்கு 

&முல்லைத்தீவு மாங்குளம்

&பூநகரி கௌதாரிமுனை 

&ஆலங்குளம்

&குருந்தன்குளம்

போன்ற இடங்களில் தொல்லியல் மேல் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார் 

இதனைவிட ஆரம்ப காலத் தொல்லியல் அகழ்வாய்வுகள் இலங்கை பேராசிரியர்களும் வெளிநாட்டவர்களும் மேற்கொள்ளப்பட்ட பங்குபற்றியுள்ளார் அவற்றில் குறிப்பிடத்தக்கனவாகும் 

*மாந்தை அகழ்வாய்வு *கந்தரோடை அகழ்வாய்வு *யாழ்ப்பாணக் கோட்டை அகழ்வாய்வு *ஆனைக்கோட்டை அகழ்வாய்வு* அல்லைப்பிட்டி அகழ்வாய்வு  போன்றவற்றிலும் பங்குபற்றியுள்ளார்

மன்னார் மாவட்டத்திலிருந்து ஊடகவியலாளர் ஜெகன் அவர்களால் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக  மன்னார் மாவட்டத்தின் இடப்பெயர்களை கொண்டு ஆய்வு செய்து வெளியீடு செய்யப்பட்ட மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும் இடப் பெயர் ஆய்வு நூலுக்கு பேராசிரியர் ப.புஸ்பரெட்ணம் அவர்கள் மன்னார் கட்டுக்க்ரை  குளத்தை அண்டி பிரதேசத்தில்  தொல்லியல் ஆய்வுகளை மேற்கொண்டு வெளியீடு செய்த ஆய்வுக் கட்டுரை பேருதவி புரிந்துள்ளது என்பதனை இங்கு பதிவு செய்தாக வேண்டும் 

பேராசிரியர் புஷ்பரட்ணம் எழுதிய நூல்களாக

1.பூநகரி தொல்பொருள் ஆய்வு 1993 யாழ்ப்பாண பல்கலைக்கழக வெளியீடு

2.தொல்லியல் நோக்கில் இலங்கைத் தமிழர் பண்பாடு 2000, 2002 சென்னை 

3.இலங்கைத் தமிழரின் பண்டைய கால நாணயங்கள் 2002 சென்னை 

4.தொல்லியல் நோக்கில் ஈழத்தமிழரின் மதமும் கலையும் 2001 கொழும்புத் தமிழ்ச் சங்கம்

5.இலங்கையில் தமிழும் தமிழரும் 2002 கொழும்புத் தமிழ்ச் சங்கம் 

6.தமிழ் எழுத்தின் தோற்றமும் ஈழத்தில் இருந்து தமிழகத்திற்கு 2004 யாழ்ப்பாண கச்சேரி

.7.ஈழத்தமிழரும் நாக அரச மரபும் 2003 சென்னை 

8.நல்லூர் இராசதானி யாழ்ப்பாணக் கோட்டையையும் 2012 கொழும்புத் தமிழ்ச் சங்கம் 

9.பத்மம் ப.ஆ 2000 சென்னை 

10.யாழ்ப்பாண வாழ்வியல் 2011 வீரகேசரி கொழும்பு 

11.இலங்கைத் தமிழர்கள் சுருக்க வரலாறு சுவிஸ்லாந்து 2017

12.ஈழத் தமிழர் மரபுரிமை அடையாளங்கள் சுவிஸ்லாந்து 2017 

இதனைவிட ஆங்கில மொழிமூலம்

(I)Ancient coins of Sri Lanka Tamil rulers 2002 Chennai

(II)Tamil place names as Gleaned from Sri Lanka Brahmi inscriptions monograph Chennai 

(III)tourism and monuments of Archaeological heritage in Northern Sri Lanka 2014 Colombo

போன்ற நூல்களையும் பல ஆய்வுக்கட்டுரைகளையும் வெளியீடு செய்துள்ளார் 

ஈழத்து வரலாறும் தொல்லியலும் 

இலங்கைத் தொல்லியல் வரலாற்றில் குறிப்பாக வட இலங்கை தொல்லியல் வரலாறு ஈழத் தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வது தொல்லியல் அகழ்வாய்வுகள் பெரிதும் துணை நின்றன அந்த வகையில் இலங்கைத் தமிழர் வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்வதற்கு மேற் கொள்ளப்பட்ட அகழ்வாய்வுகள் பெரும்பாலும் வட இலங்கையில் மேற்கொள்ளப்பட்டிருந்தது

வட இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் 

பேராசிரியர் சி.பத்மநாதன் 

பேராசிரியர் இந்திரபாலா 

பேராசிரியர் ரகுபதி 

பேராசிரியர் புஸ்பரட்ணம் 

பேராசிரியர் கிருஷ்ணராஜா

பேராசிரியர் சிவசாமி 

போன்றோர் முக்கியத்துவம் பெறுகின்றனர் 

எனினும் வட இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான தொல்லியல் ஆய்வுகளை பேராசிரியர் புஸ்பரட்ணம் அவர்கள் மேற்கொண்டிருந்தார் அவரது அகழ்வாய்வுகள் அனைத்துமே ஈழத் தமிழர் வரலாற்றை திரும்பிப் பார்க்கச் செய்த காணப்படுகின்றது 

குறிப்பாகச் சொல்லவேண்டுமெனில் இலங்கை தமிழர் வரலாற்றுக்கு புது வெளிச்சம் பாச்சியவர்களில் பேராசிரியர் புஸ்பரட்ணமும் ஒருவராவார் இவரது அகழ்வாய்வுகளில் பூநகரி, யாழ்ப்பாணக் கோட்டை, கட்டுக்கரை, நாகபடுவான் செட்டிகுளம் போன்ற பெரும்பாலான  பெருங்கற்கால மையங்கள் அல்லது பெருங்கற்கால மக்கள் வாழ்ந்த குடியிருப்புக்களை தொல்லியல் அகழ்வாய்வு மூலம் அகழ்ந்து வெளிப்படுத்தினார் 

தொல்லியல் ஆய்வில் திருப்புமுனை

புதியதோர் திருப்பு முனையினை இலங்கை தமிழர் வரலாற்றில்ஏற்படுத்தவுள்ள ஆனைக்கோட்டையில் 44 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சி பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் அவர்கள் தலைமையில் மீண்டும் நடைபெற்று வருகிறது 20.06.2024 அன்று ஆரம்பமாகிய ஆனைக்கோட்டை அகழ்வாய்வு பணி தமிழர் வரலாற்றில் பாரியதொரு திருப்புமுனையாக அமையும் எனக் கருதுகின்றேன்

ஈழத்தமிழர் இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்தனர் என்பதற்கான ஆதாரங்களை அகழ்ந்து வெளிப்படுத்திய ஈழத்துத் தொல்லியல் துறையின் வாழ்நாள் பேராசிரியர்  பரமு புஸ்பரெட்ணம் அவர்களுக்கு தமிழ் மக்கள் நன்றிகளையம் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறார்கள் 

ஈழத்து வரலாறும் தொல்லியலும் 

Push Malar  



No comments