Page Nav

HIDE

Breaking News:

latest

சிந்துஜா மரணம் தொடர்பாக ஐக்கிய ராஜ்யத்திலிருந்து இலங்கை அரசாங்கத்திற்கு கடிதம்

அண்மையில் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில்  வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் அசமந்தப் போக்கினால் மரியராஜ் சிந்துஜா என்னும் 27 வயதுடைய பட்...

அண்மையில் மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில்  வைத்தியர்கள் மற்றும் தாதியர்களின் அசமந்தப் போக்கினால் மரியராஜ் சிந்துஜா என்னும் 27 வயதுடைய பட்டதாரியான இளம் தாய் மரணமடைந்தமிருந்தார். இந்த சம்பவம் நாடளவில் பாரிய அதிர்வலைகளை உண்டுபண்ணியது 

இந்த சம்பவத்தின் தீவிரத் தன்மையை உணர்ந்த மன்னார் மாவட்ட வைத்தியசாலைக்கு பல உதவிகளையும் கடந்த ஆண்டு பல கோடி ரூபா பெறுமதியில் நவீன மகப்பேற்று விடுதியினை அமைத்துக் கொடுத்த ஐக்கியராஜ்யத்தில் செயற்படும் மன்னார் நலன்புரி சங்கத்தினர்  பிரான்ஸ்நாட்டில் செயற்பட்டு வரும்  மன்னார் நலன்புரி சங்கத்தினர் ஊடாக  இலங்கை ஜனாதிபதி மற்றும் இலங்கை சுகாதார அமைச்சுக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர் 

குறித்த கடிதத்தில் 

மன்னார் மாவட்ட வைத்திய சாலையில் இடம்பெற்ற 18 நாள் பூர்த்தி அடைந்த சிசுவின் தாயார் மரியராஜ் சிந்துஜாவின்  மரணம் தொடர்பாக 

மேற்படி விடயம் தொடர்பாக தங்களின் கவனத்திற்கு தருவது 

சம்பவம் 

மன்னர் மாவட்டத்தில்  மடு பிரதேச செயலாளர் பிரிவின் தம்பனை குளம் எனும் கிராமத்தைச் சேர்ந்த திருமதி மரியராஜ் சிந்துஜா  வயது 27 என்பவர் 9 -7 -2024 அன்று குழந்தை பேற்றிற்காக  மன்னார் மாவட்ட பொதுவைத்தியசாலையில் மகப்பேற்று பிரிவில் இலக்கம் ஆறாம் விடுதியில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மூலம் குழந்தை பிரசவித்து 11-7-2014 தாயும் சேயும் நலமாக வீடு  திரும்பியுள்ளனர்.

முருங்கனில் சிகிச்சை

அதன் பின்பு 16-7-2024 அன்று சத்திர சிகிச்சையின் போது இடப்பட்ட இழையை  அகற்றுவதற்கு  முருங்கன் வைத்தியசாலைக்கு சென்று  இழையை அகற்றி  சிகிச்சையும் பெற்று வந்துள்ளார் 

மீண்டும் மன்னார் வைத்திசாலை 

பின்னர் 27 -7- 2004 அன்று இரவு ஏற்பட்ட உதிரப்போக்கு காரணமாக அன்றிரவே உடனடியாக மருத்துவ அவசர ஊர்தியின் மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக விடுதி இலக்கம் ஆறில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 

மருத்துவர்களின் அசமந்தப் போக்கு 

 இவரின் உயிர் ஆபத்தின் நிலையினை அக்கணம் பணியில் இருந்த மருத்துவ தாதிகள் உணர்ந்து கொண்டு  அப்பொழுது பணியில் இருந்தும் தமது விடுதியில் ஓய்வில் இருந்த மருத்துவர்களிடம் தெரியப்படுத்தியுள்ளனர் உடன் தெரியப்படுத்தப்பட்ட போதும் உடனடியாக எந்த ஒரு சிகிச்சையும் வழங்கப்படவோ அல்லது குறித்த இடத்திற்கு மருத்துவர்கள் சமூகமளிக்கவோ இல்லை

சிகிச்சை பலன் இல்லை 

மறுநாள் காலை முற்பொழுது வரை மருத்துவர்களின் பொறுப்பற்ற இழிநிலை தொடர்ந்துள்ளது இதனால் தொடர்ச்சியான அதிக உதிரப்போக்கு காரணமாக குறித்த இளம் தாய் சுயநினைவினை  இழந்தந்த நிலையில் பின்னர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உயிர் கணப் பொழுதில் மருத்துவ சிகிச்சை அளிக்காததினால் உயிரிழந்துள்ளார் 

மானுடத்தின் அவலம் 

இச்சாவு என்பது ஒரு செய்தி அல்ல மானுடத்தின் அவமானம் இன்றைக்கு இறைவனுக்கு நிகராக கருதப்படும் மருத்துவ கடவுள்களின்  ஈன செயல்.

இறையுள்ளதோடு உதித்த சிசுவுக்கு செய்த அதி பாதகச் செயல். படித்து பல்கலைக்கழகம் சென்று பட்டதாரியாகி இனிய மணவாழ்வை சிறகடித்து பறக்க துடித்த இளம் தாய்க்கு கொடுத்த நீதியற்ற மரண தண்டனை என்னும் ஏன்? 

ஒட்டுமொத்த மானுடத்திற்கே விடுக்கப்பட்ட அபாய எச்சரிக்கை இதுவாகும் குரலற்ற மக்களின் குரலாகவும் மன்னர் மாவட்டத்திற்கும்  ஒட்டுமொத்த நாட்டினதும் நலனில் என்றும் அக்கறை உள்ளவர்களாயும் செயற்பட்டு வரும்  மன்னார் நலன்புரிசங்கம் பிரான்சு ஆகிய நாம் இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

புலம்பெயர் உறவுகளின் தியாகம் 

ஏதிலிகளாய் புலம்பெயர்ந்து தேசங்களில் இருந்து கடும் குளிர், மழை பாராது தேடிய தேட்டத்தில் எம் சொந்தத் தேவைகளை   சுருக்கி எம் தொப்பூழ்  கொடி உறவுகள் மறவாமல் மாவட்ட நாட்டின் நலனில் அக்கறை கொண்டு கல்வி, மருத்துவம், விளையாட்டு, தொழில்சார் உதவிகள் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம், இன்னும் பல திட்டங்கள் வகுத்து செயலாற்றும் எமக்கு இச்செய்தி பேரதிர்ச்சியையும் மன வேதனையையும் தருகிறது.

மகப்பேற்று விடுதி புனரமைப்பு

 பல வருட காலமாக புனரமைக்கப்படாமல்  கவனிப்பாராற்று கிடந்த மன்னார் மாவட்ட வைத்தியசாலையின் மகப்பேற்றுமனை 2024 ஆம் ஆண்டு பல கோடி ரூபா செலவில் மன்னார் நலன்புரிச் சங்கத்தினரால்  (ஐக்கிய ராச்சியம்) புனரமைக்கப்பட்டு மேற்கத்திய நாடுகளின் வைத்திய சாலைகளுக்கு நிகரான தரத்துடன் எமது மன்னர் மாவட்டத்தில் பிறக்கும் குழந்தைகளும்  பிரசவிக்கும் தாய்களுக்கும் நல்ல சூழல் அமைவிலும்  வசதிகளையும் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கமே இங்கு முதன்மைப்படுத்தலாகும்

நீதியானவிசாரணை வேண்டும் 

 தங்கள் நிர்வாக அதிகார உட்பட்ட சுகாதார அமைச்சின் மருத்துவமனையாது எம். மாவட்டத்தில் அளப்பரிய சேவை ஆற்றியுள்ளது என்பதனையும் நாம் நன்கு அறிந்துள்ளதோடு நன்றி மறந்தவர்களும் இல்லை  

இறைக்கு நிகரான மருத்துவர்கள் சிலர் உயிர் பறிக்கும் காலன்களாக மாறுவது என்பது ஏற்றுக் கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாது அந்த வகையில் 18 நாள் சிசுவின் உடைய இளம் தாயின் சாவு என்பது ஒரு கொலையாகவே நாம் கருதுகிறோம் 

கொலைக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் 

இக்கொலைக்கு காரணமான பொறுப்பற்ற மருத்துவர்கள் அதற்கு தெரிந்தோ,தெரியாமலோ அசமந்த போக்குடன் இருந்தவர்கள் முறையான பக்க சார்பற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் 

நடுநிலை தவறாது உடற்கூற்றறிக்கை பெறப்பட வேண்டும் அநீதியான இக்கொலையினை செய்த மருத்துவ காலன்கள் மூடி மறைக்க எடுக்கப்படும் முயற்சிகளை தடுப்பதோடு உரிய ஆலணியினரால் முறையாக கண்காணிக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் 

மேற்படி நடவடிக்கைகள் தங்களின் மேலான கவனத்திற்கு கீழ் கொண்டுவரப்பட்டு நீதி நிலைநாட்டப்பட்டால் எதிர்காலத்தில் இதுபோன்ற அநியாயமாக மருத்துவ படுகொலைகள் தடுத்து நிறுத்தப்படும். என்பதுடன் மருத்துவ காலன்கள் மருத்துவக் கடவுளாவார்கள் 18 நாள் சிசுவின் தாயின் கொலையின்  நீதி விசாரணை இனிமேலும் மருத்துவ காலன்களின் பிறப்பினை கொலை செய்யட்டும் தங்களின் நீதி முறை தவறாக செயல்பாட்டை எதிர்பார்த்து காத்திருக்கும்  ஐக்கிய ராஜ்ஜியத்தில் செயற்பட்டு வரும் மன்னார் நலன்புரிச் சங்கத்தினர் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது




No comments