Page Nav

HIDE

Breaking News:

latest

மீண்டும் தமிழர் தரப்பு வரலாற்று தவறை செய்யப்போகிறதா? ஊடகவியலாளர் கார்த்தீபன்

எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெற இருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழர் தரப்பின் ...

எதிர்வரும் செப்டம்பர் 21ம் திகதி நடைபெற இருக்கும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழர் தரப்பின் சார்பில் என்று சில அரசியல் கட்சி  தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தியுள்ளது இந்த செயற்பாடு தமிழ் மக்களிடம் எடுபடவில்லை 

அத்துடன் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது என்று ஆரம்பத்தில் முன் நின்று உழைத்த அரசியல் கட்சிகள் சில அதிலிருந்து ஒதுங்கியுள்ளதாக அறிய முடிகிறது 

என்றாலும் எமக்குக் கிடைத்த புலனாய்வுத் தகவல்களின்படி  தமிழ் பொது வேட்பாளர் என்பது ஒரு மாயை என்று மக்கள் மத்தியில் ஒரு கருத்து நிலவுகிறது 

இந்த தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாகவும் நடைபெற இருக்கும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவும் ஊடகவியலாளர்  பரமேஸ்வரன் கார்த்தீபன் அவர்கள் தனது கருத்தினை வெளியிட்டுள்ளார் 

செல்வா அவர்களின் பராளுமன்ற வெற்றிக்காக கொண்டு வந்த வட்டுக் கோட்டை பிரகடனம் தனி ஈழம் இதன் விளைவு வெடித்தது ஆயுதப்போராட்டம் 

இப்படி கடந்த காலங்களில் நடந்த விடயங்களால் கற்றரிந்த பாடங்களை மறந்து இன்று தமிழ் தேசிய கட்சிகள் எனக்கூறிக்கொள்ளும் 7கட்சிகளினால் நடக்கவிருக்கும் இலங்கையின் 9வது ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது என்பது எம்மக்களின் எதிர்காலத்தை எங்கு கொண்டு செல்ல போகிறது..? 

கடந்தகால தேர்தல்களில் இருந்து பாடம் 

வடக்கு கிழக்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல்களின் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் தமிழ் தேசிய கட்சிகள் பெற்ற வாக்குகளை விட ஏனைய கட்சிகள் பெற்ற வாக்குகளே அதிகம் இது அன்றைய நிலை இன்று ஏனைய கட்சிகளின் வாக்கு வங்கி கனிசமாக மேலும் அதிகரித்து இருப்பதற்கான சந்தர்ப்பங்களே அதிகமாக காணப்படுகிறது 

பல பிரதான கட்சிகள் 

யாழில் EPDP,விஜயகலா,அங்கஜன்,சந்திரகுமார், இவர்களுடன் தேசிய கட்சிகள், வன்னியில் EPDP,Sritelo, மஸ்தான், ரிசாட், மற்றும் தேசிய கட்சிகள்,கிழக்கில் பிள்ளையான்,வியாழேந்திரன், கருணா, தேசிய கட்சிகள் இவர்களுடன் முஸ்லிம் கட்சிகள், அதனுள்,சைக்கிள் கட்சியினர் தேர்தலை புறக்கணிக்க கோரி வேறு பிரச்சாரம் செய்கின்றனர் 

இவ்வாறு பட்டியலிட்டால் வாக்கு வங்கி தமிழ் தேசிய கட்சிகளை விடுத்து ஏனைய கட்சிகளுக்கே அதிகமாக காணப்படுகிறது இது இவ்வாறிருக்க நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் இந்த 7கட்சிகளின் பொதுவேட்பாளர் எத்தனை வாக்குகளை பெறுவார் என்று ஓரளவு சிந்தித்து பாருங்கள் 

ஆக யாரோ ஒரு சிங்கள வேட்பாளருக்கு தான் வடக்கு கிழக்கில் வாக்குகள் அதிகம் விழப்போகின்றது எனவே ஏன் இந்த விஷப்பரீட்சை??  

தமிழர் தரப்பின் தீர்வுகள் 

எப்படியோ ஜனாதிபதியாக ஒருவர் வந்த பின்னர் தமிழர் தரப்பு ஏதேனும் இனரீதியான தீர்வு என்று பேச்சுவார்த்தைக்கு போகலாமா??? மீறி போனால் உதாரணமாக வடக்கு கிழக்கு இணைப்புஇ அல்லது மாகாண சபை அதிகரா பரவலாக்கல் என சென்றால் அங்கிருந்து வரும் பதில் என்ன..” நீங்கள் கோரிக்கை வைத்து நிறுத்திய பொதுவேட்பாளரை மக்கள் நிராகரித்து தானே எமக்கு வாக்களித்தனர் எனவே மக்கள் அதனை விரும்பவில்லை என கூறி தமிழர் தரப்பில் கொண்டுசெல்லப்படும் தீர்வுகள் தூக்கி வீசப்படும் என்பது எனது பார்வையில் தெரிகிறது  

என்னைப்பொருத்தவரை வெல்லப்போகும் ஒருவருடன் எமது கோரிக்கைகளை நிபந்தனையாக முன் வைத்து வென்ற பின்னர் அவருடன் பேரம் பேசி தமிழர் தாயகத்திற்கும் மக்களுக்கும் ஏதேனும் நல்லதை செய்வதே சிறந்த ஓர் அரசியல் பயணமாக இருக்கும் என நினைக்கின்றேன் 

இறுதியாக

இல்லையேல் இந்த ஏழு கட்சிகளும் மாத்திரம் அல்ல ஏனைய தமிழ் கட்சிகள் மற்றும் மலையக கட்சிகளையும் இனைத்துக்கொண்டு பொதுவேட்பாளரை நிறுத்தி மாபெரும் மக்கள் பலத்தை காட்ட வேண்டும் அது சர்வதேச ரீதியில் ஓர் கவனத்தை ஈர்க்க வைக்க கூடிய விடயமாக இருக்கும் ஆனால் அதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை என்பதே உண்மை எனவே மீண்டும் மீண்டும் வரலாற்று தவறுகளை செய்து தமிழர்களின் எதிர்காலத்தை சிதைக்காமல் எமக்கு பின்னால் வரும் எங்கள் சந்ததிகளுக்கு நல்லதொரு எதிர்காலத்தை கொடுங்கள் 

நன்றி 

வன்னியிலிருந்து 

வன்னியின் செல்வன் 

பரமேஸ்வரன் கார்த்தீபன்


No comments