Page Nav

HIDE

Breaking News:

latest

மட்டக்களப்பில் மீன் பாடுவது உண்மையா? மட்டக்களப்பை மீன் பாடும் தேன் நாடு என்று ஏன்சொல்கிறார்கள்

 மட்டக்களப்பில் மீன் பாடுவது உண்மையா? மட்டக்களப்பை மீன் பாடும் தேன் நாடு என்று ஏன் சொல்கிறார்கள் மட்டக்களப்பு மாவட்டத்தை  பொருத்த மட்டில்  ம...

 மட்டக்களப்பில் மீன் பாடுவது உண்மையா? மட்டக்களப்பை மீன் பாடும் தேன் நாடு என்று ஏன் சொல்கிறார்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தை  பொருத்த மட்டில் மீன் பாடும் தேன் நாடு என்று கூறுவதால் அங்கே மீன்கள் பாடுவதாக (இசைப்பதாக )ஒரு கருத்து நிலவுகிறது இது தொடர்பான பல ஆய்வுக் கட்டுரைகள் வெளிவந்துள்ளது சில ஆராய்ச்சிகள் கூட நடைபெற்றதாக தகவல்கள் உண்டு மட்டக்களப்பில் வசிக்கும் மக்கள் எவரும் அதை மறுக்கமாட்டார்கள்  

குறிப்பிட்ட ஒரு காலத்தின் பின்னர்  அது மக்கள் மனதில்  நிலைத்து விட்டது  இது தொடர்பாக சில நூல்களும் இணையத்தளங்களில் கட்டுரை ஆக்கங்களும் வெளி வந்துள்ளதை அறிய முடிகிறது


நாங்கள் பெறக் கூடிய தகவல்கள் இவ்வாறு இருந்தது

18 ம் நூற்றண்டுக்ளில் இருந்து மட்டக்களப்பு மீன்பாடு வாவியில் ஒருவகை மீன் பாடுவதை கேட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து அநேக மக்கள் இதை நம்பவில்லை.

பாடும் மீன்கள் இருப்பதை அதற்கு முன்பு உலகத்தில் எந்த நீர்நிலைகளிலும் இப்படி மீன் பாடிய தகவல் என்று கேட்டுள்ளார்கள்

அநேகமாக இந்த வகை மீன்கள் கல்லடிப் பாலத்தின் அடியிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் இவ்வாறு மீன் பாடுவதை நடு இரவுகளில் அவதானித்தனர்
பாடும் மீன்களை ஆய்வுகள் செய்யும் அளவிற்கு அக்காலம் அறிவியல் ரீதியில் முன்னேறியிருக்கவில்லை. ஆனால் மக்கள் மத்தியில் மிகப் பிரபல்யமாகப் பேசப்பட்ட ஒன்றாக இப் பாடு மீன்கள் காணப்பட்டது. இப்பாடு மீன்களை கலைஞர்கள் வர்ணித்தார்கள், சில இடங்களில் இம் மீன்கள் கடற்கன்னிகளாகவும் சித்தரிக்கும் அளவிற்கு உலகப் பிரபல்யம் அடைந்தது.

பொதுவாக இவ்வகை மீன்கள் பாடுவதை முழுப் பூரணை நாட்களில் அமைதியான இரவில் கல்லடிப் பாலத்தின் அடியிலுள்ள ஆழமான பகுதியிலும் பாலத்திலிருந்து தென் மேற்குப் பகுதியில் நீர் மேல் தென்படும் ஒரு மலைக் குன்றுகளுக்கும் அதைச் சுற்றியுள்ள பகுதியிலும் இவ்வகை மீன்கள் பாடுவது ஒரு சாதரண நிகழ்வாக 1960 ஆண்டு காலப் பகுதியில் காணப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து இதன் உண்மைத் தன்மையினை அறியும் நோக்கோடு ஒரு பூரணை இரவில் Fr. Lang என்னும் ஆங்கில நாட்டவர் mic ஒன்றினை மீன் பாடும் பகுதிகளில் மீனவர்களின் துணையோடு பொருத்தி மீன்கள் பாடுவதை மட்டக்களப்பு நகர் மக்கள் அனைவரும் கேட்கும் படி ஒரு ஒலிபெருக்கி ஒன்றையும் பாலத்தின் மேலே இணைத்து மீன்கள் பாடியதை 8 நிமிடங்கள் ஒளிபரப்பு செய்து மட்டக்களப்பு மண்ணின் மகிமையை உலகிற்கு பறை சாற்றினார்.

பதிவு செய்யப்பட்ட மீன் பாடும் இசையை B B C வானொலியில் மீண்டும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. 2004 ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பிற்பாடு மீன்கள் பாடுவதை கேட்க முடியவில்லை என அப்பிர்தேச மீனவர்கள் மிக்க கவலையோடு குறிப்பிட்டிருந்தனர். மட்டக்களப்பு மண்ணிற்கு பெருமை ஈட்டித் தந்த அழகிய மீன் இனம் அழிந்திருக்கலாம் என நம்பப்பட்டது. இதைத் தொடர்ந்து சில வருடங்கள் கழித்து மீண்டும் மீன்களின் இசைக் கச்சேரிகள் அரங்கேற்றம் இடம்பெற்ற தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டன.

2014 ம் ஆண்டு B B C வானொலிக் குழுவினர் மட்டக்களப்பிற்கு வந்து சில நாட்கள் தங்கியிருந்து மீன்களின் இசைக் கச்சேரியைப் பதிவு செய்து மட்டக்களப்பு மண்ணின் மகிமையை உறுதிசெய்தனர் என்றால் மிகையாகாது.

பதிவுகளை பார்க்க முடிந்ததடன் இதே போன்ற கானொளிகளை யூடியுப் வலைதளத்திலும் காண முடிந்தது  அது அந்த மக்களின் நம்பிக்கை

இவ்வாறு மீன் பாடுமா? என்று  கேள்விகள் எழுந்தாலும்  மட்டக்களப்பின் பெயர்ச் சொற்கள் சிலவற்றையும் இடப்பெயர்கள் சிலவற்றையும் ஆள்சு செய்த போது  தொல்காப்பியம் மற்றும் இராமாயணம் போன்ற நூல்கள்  ஒரு விளக்கத்தைத் தருகிறது

பாடு என்பது தொழிற் பெயர் இலங்கையில் இருந்த மிகப்பழங்கால மக்கள் பாடு என்னும் தொழிலை செய்து வந்துள்ளதாக  இராமாயணம், தொல்காப்பியம், போன்ற நூல்கள் குறிப்பிடுகின்றது அவை ஏர்க்களம்  பாடுநர்(விவசாயம்) ,போர்க்களம் பாடுநர்(தமிழர்களின் வீரம் யுத்தம்),  பரணி பாடுநர் இயற்கை மற்றும் பெண்கள் வர்ணனை  நீர் வழிந்தோடும் ஓசையின் அசைவுகளை பாடுதல்,  

அடுத்தது மீன் பிடித் தொழிலை அல்லது தொழில் செய்யும் இடத்தை பாடு என்றே மீனவர்கள் கூறுவார்கள்  அவை வடக்கு மாகாணத்தில் வங்காலைப்பாடு, தாழ்வுபாடு, கள்ளப்பாடு, வலைப்பாடு,  என்று அரச பதிவேட்டில் இருந்தாலும் மீனவர்கள் தொழில் புரியும் இடங்களை பாடு என்றே கூறுவது அனைவருக்கும் தெரியும்

இந்த மீன் பிடி தொழிலை குறித்ததான சொல்  பாடு என்பது நாளடைவில் ம் சேர்த்து பாடும் என்று மருவியிருக்க வாய்ப்புகள் இருக்கிறது 

மட்டக்களப்பு என்பதற்கான அர்த்தம் பலரும் பலவிதமாக கற்பித்தாலும் அப்பெயரின் சொற்களுக்கான அர்த்தங்கள் சிலவற்றை நாம் அவதானித்த போது

மட்டம் என்பது வாழைக்கன்று
மட்டம்(பெ)வாழைக்கன்று,கள்,சமதளம்,தரக்குறைவு

களப்பு என்பது களப்பு என்பது கழி ஓதம் அல்லது உயர் ஓதம் High Tide

கழிமுகத்தை நோக்கி வருவதால் இது கழி ஒதம்..இக்கழி ஓதத்தின் போது கடல்நீர் மட்டத்தின் உயரம் நிலத்தின் உயரத்ததை விட அதிகமாக இருக்கும். இதனால் நிலத்தினுள் கடல் நீர் வரும் அல்லது நீர்மட்டம் உயர்வதையும் தாழ்வதையும் குறிக்கும்.

மட்டு ,அவதி அளவு, கள்.
கள் என்பது இங்கு பழந்தமிழர்கனின் ஒரு தொழிற் குறியீடையும் கள்ளுண்டு களித்திருக்கும் அரக்கர்களின் குறியீடாகவும் எடுத்துக் கொள்ளலாம்
மட்டுப்படாமை அடங்கமை, எட்டாமை. அடங்காமை என்பது தமிழர்கள் எவருக்கும் அடிபணிந்து போகாததை குறிக்கும்
மட்டி -மட்டி எனபது பல அர்த்தங்கள் கொடுத்தாலும் மட்டி என்பது நீர் உயிரி ஒரு கடலுணவு தமிழர்களின் ஒரு சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு

எமது ஆய்வுக் கருத்தின் படி மீன் பாடும் தேன் நாடு என்பது –மீன் பாடுதென்நாடு அதாவது மீன் பாடு பாடு என்பது தொழிற் பெயர் தேன் நாடு என்றில்லாமல் தென்நாடு என்றிருக்கும். அதாவது இலங்கையை தென்நாடுடைய சிவனே போற்றி என்று தேவார புராணத்தில் வருகிறது (இலங்கை சிவ பூமி என்பதால் ) தென்பாண்டி நாடு என்று கம்பராமாயணத்தல் குறிப்பிடப்படுகிறது. செவிவழிக் கதைகள் சிலநேரங்களில் மருவி வேறு ஒரு அர்த்தங்களை கொடுப்பது வழமை

அவ்வாறு பாடு ‘பாடும்’ என்றும் தென்நாடு ‘தேன்நாடு’ என்றும் மருவி இருக்க வாய்ப்புகள் உண்டு

இவற்றிற்கான ஆதாரங்களும் தரவுகளும் நீண்டு செல்லும் என்பதனால் முடிந்தவரை சுருக்கமாக கூறப்பட்டுள்ளது

மக்கள் ஒறு வரலாற்றுத் தகவல் மீது நம்பிக்கை வைப்பது தவறு அல்ல அடுத்த தலைமுறைக்கு செவி வழியே கடத்தும் தகவல்களில் எவ்வளவு உண்மைகள் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும் எம்மால் முடிந்தவரை இந்த தகவலை தந்திருக்கின்றோம் சங்ககலா இலக்கிய நூல்களைத் தேடுங்கள் படியுங்கள் ஈழத் தமிழர் வரலாறு தொடர்பாக அதிகமான தகவல்கள் கிடைக்கலாம்

No comments