Page Nav

HIDE

Breaking News:

latest

பெண் சுயதொழில் வெற்றியாளர் உமாவின் புதிய தொழிற் கூடத்திற்கு அடிக்கல் நாடப்பட்டது

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக  பெண் சுய தொழில் முயற்சியாளராக பல்வேறு சுயதொழில்களில் உழைத்து  இன்று ஒரு இளம் பெண் வெற்றிய...

மன்னார் மாவட்டத்தில் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக  பெண் சுய தொழில் முயற்சியாளராக பல்வேறு சுயதொழில்களில் உழைத்து  இன்று ஒரு இளம் பெண் வெற்றியாளராக வலம் வரும் திருமதி இம்ரான் உமா அவர்களின் புதிய தொழிற் கூடம் ஒன்றினை அமைப்பதற்காக மன்னார் மாவட்டச் செயலாளர்  திரு.க.கனகேஸ்வரன் அவர்களினால் அடிக்கல் நடப்பட்டது

இந்த நிகழ்வானது இன்று(17) காலை .9.00 மணியளவில் இடம்பெற்றது

இந்த நிகழ்வில்  இலங்கை கைத்தொழில் அதிகார சபையில் மன்னார் மாவட்ட இணைப்பாளர் திரு.லெம்பேட் , மன்னார் மனித உரிமை செயற்பாட்டாளர் தயாளராஜன், மன்னார் சட்டத்தரணி திருமதி புராதனி,  மன்னார் குடிசார் அமைப்புக்களின் ஒன்றிய தலைவி திருமதி மெற்றில்டா, அட்ரா நிறுவனத்தின் மாவட்ட பணிப்பாளர், ஈழ ஏதிலியர் மறுவாழ்வு கழகத்தின் மாவட்ட இணைப்பாளர், மன்னார் மாவட்ட விதாதா இணைப்பாளர், கிராம சேவையாளர், சமுர்த்தி, மற்றும் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்.

குறித்த தொழில் கூடத்தில் மிளகாய் மற்றும்  அரிசி அரைத்து பொதி செய்தல், தேங்காய் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் உற்பத்திகள் நடைபெற உள்ளது

உமா அவர்கள் மன்னார் செல்வநகர் பகுதியில் கடந்த 10 வருடங்களாக  தொற்று நீக்கி திரவங்கள், சலவைத் தூள்கள், தயாரித்து குடிசைக்  கைத்தொழில்கள் மூலம் சிறப்பாக இயங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments