Page Nav

HIDE

Breaking News:

latest

வவுனியா பாவற்குளத்தின் தொன்மையான வரலாற்றுத் தகவல்கள்

வவுனியாவில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம் கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் நாகமன்ன...

வவுனியாவில் உள்ள மிகப்பெரிய குளங்களில் ஒன்றான பாவற்குளம் கிறிஸ்து சகாப்தத்திற்கு முற்பட்ட காலத்தை சேர்ந்தது. கி.மு 3ஆம் நூற்றாண்டில் நாகமன்னர்களால் கட்டப்பட்டது என்ற ஒரு தகவல் உள்ளது

பெயர் உருவாகக் காரணம் 

குளத்தை அண்டிய பகுதிகளில் குருவித்தலைப் பாவற்கொடிகள் அதிகமாகக் காணப்பட்டபடியால் இந்தக்குளத்தைப் பாவற்காய்க்குளம் என அழைக்கப்பட்டது. காலப்போக்கில் பாவற்காய்க்குளம் என்பது பாவற்குளம் எனச் சுருங்கி விட்டது

ஆனால்  இந்த குளத்திற்கான இடப்பெயர் கூறும் அர்த்தம் வேறு ஒரு பதிவில் தரப்படும் 

மன்னார் அருவியாற்றின் கிளையாறு

வன்னி பிரதேசத்தின் தென்பகுதி நதியான அருவியாற்றின் பிரதான கிளையாகிய கல்லாற்றை மலைப்பாங்கான இடத்தில் மறித்து கட்டி இரண்டு குளங்கள் உருவாக்கப்பட்டன. தற்போது இவற்றில் ஒன்று பாவற்குளம் என அழைக்கப்படுகின்றது. இதனோடு ஒட்டியுள்ள மற்றைய குளம் உளுக்குளம் என பெயரிடப்பட்டுள்ளது. 

பாவற்குளத்துடன் தொடுக்கப்பட்டிருக்கும் உளுக்குளத்திற்கும் பாவற்குளத்து நீர் பாய்கின்றது. மிகப் பெரிய நீர்ப்பாசன திட்டமான பாவற்குளத்தில் அணைகளில் புராதன கலிங்குக் கற்களின் எச்சங்கள் காணப்படுகின்றன. கலிங்குகள் பொதுவாக வாயில் கொட்டுடன் கூடியவையாக இருக்கின்றன. அதாவது கணிசமானளவு அகலமும் சிறிய தடிப்பமுடைய நீண்ட கல்துண்டங்கள் கலிங்கின் ஓரங்களில் போடப்பட்டு மிகவும் கவனமாகப் பொருத்தப்பட்டுள்ளன.


 ஆய்வாளர்களின் கூற்று

கல்வேலைப்பாட்டுக்கு பின்னால் செங்கல் வேலை செய்யப்பட்டு ஆதாரம் அளிக்கப்படுகின்றது. வாயில் கொட்டுடன் கூடிய கலிங்குகள் ஐந்தை தற்போதும் காணக்கூடியதாகவுள்ளது. மேலும் இதுவரை தனக்கு தெரிந்த மட்டில் இலங்கைத்தீவிலுள்ள நான்குக்கும் மேற்பட்ட கலிங்குகளுடன் கூடிய ஒரேயொரு குளம் இது என திரு.பாக்கர் கூறுகிறார். கலிங்குகளில் புறநடையாக ஒன்று தவிர ஏனையவை நன்னிலையில் உள்ளன. 

இலங்கையில் உள்ள குளங்களுள் பாவற்குளமே 4 கலிங்குகளைக் கொண்டிருப்பதாகக் ஜே.பி .லூயிஸ் குறிப்பிடுகின்றார்.புராதன நீர்ப்பாசனக் கால்வாய் எச்சங்கள் 2 பாவற்குளத்தில் உள்ளது. அவை முறையே 3, 2 ¼ மைல் நீளத்துக்கு உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 2 மைல் நீளமான அணைகளை உடையவை. 

கி.பி. மூன்றாம் நூற்றாண்டுக்குரியவை

இக்குளத்தின் கலிங்குகள் இரண்டில் பயன்படுத்தப்பட்டிருந்த கட்டடக்கற் துண்டங்கள் (துருசு கற்கள்) பதவியாக் கலிங்கில் பயன்படுத்தப்பட்டிருந்தவற்றை விட மிகப் பழமையானவை. பதவியாக் கலிங்கு கி.பி 3ஆம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது. பாவற்குளத்தின் கலிங்குகளை அமைக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் செங்கற்கள் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தவை என பாக்கர் குறிப்பிட்டுள்ளார்.

இக்குளம் பற்றி ஜே.பி லூயிஸ் "MANNUAL OF VANNI DISTRICT" என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்.அதில் பாவற்குளத்தில் உள்ள வான் 125 அடி நீளமும் இ 60 அடி அகலமும் உடையது. வான்கள் வழமையில் கலிங்குகளாக கட்டப்பட்டன. அதாவது தூண்கள் தொடராக அமைக்கப்பட்டதன் மூலம் சட்டக அமைப்பின் மீது அணை ஏற்படுத்தி நிர்மாணிக்கப்பட்டது. இதன் மூலம் ஏறத்தாழ 2 அடி ஆழத்துக்கு மேலதிக நீரைப் பிடித்து வைத்துக் கொள்ள முடிந்தது.

பாவற்குளத்தில் இத்தகைய கலிங்கு ஒன்றைக் காணமுடியும்.இத்தூண்கள் பருமனிலும் வடிவத்திலும் மிகவும் ஒழுங்கற்றவை. பெரிய தூணுக்கு முற்பக்கமாகச் சில அங்குலங்கள் விலகி 5 அல்லது 6 அடி உயரமுள்ள குறுகிய தூண் உள்ளது. இச்சிறிய தூண்களின் நிரைஇ வான் பாயும் நீருக்குச் சற்று முன்பக்கமாக குளக்கட்டின் மத்திய கோட்டின் வழியே குளப்பக்கமாக அமைந்துள்ளது. 

இச்சிறு தூண்களிடையே தடிகளும் மண்ணும் கொண்டு தற்காலிக அணை ஒன்று எழுப்பப்பட்டிருக்கும். வடகீழ்ப்பருவப்பெயர்ச்சி மழை நிற்கும்போது மேலதிக நீரைப் பிடித்து வைத்திருக்க வேண்டும் என விருப்பப்பட்ட நேரங்களில் உயர்ந்த தூண்கள் இவ்வாறு அணை எழுப்பி நீரைத்தேக்கி வைக்கும். அதி உயரமான தூண்கள் எவ்வித பயன்பாடும் அற்றனவாக உள்ளன. சிலவேளை கலிங்கை மூடி வெள்ளம் பாயும்போது பாதசாரிகளால் இது தற்காலிக அடிப்பாலத்தின் இறங்கு துறையாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது எனலாம். இதன் மூலம் பயணிகள் எப்போதாவது வான் நீருக்கு மேலாக பாயும் வெள்ளத்தைக் கடந்து செல்லக்கூடியதாயுள்ளது. 

நீர் வணக்க செயற்பாடு 

அணைக்கட்டில் உள்ளடக்கப்பட்டதும் முன்பு உயர்ந்த பாறையொன்றில் இருந்ததுமான சிறிய தாதுகோபத்தினது சிதைவுகள்இ மலர் தூவி வணங்குவதற்கான பெரிய பீடம் ஒன்று காணப்பட்டது. இப்பீடம் இப்போது ‘அரச ஆசனம்’ எனப்படுகிறது. இப்பீடம் பற்றித் திரு. பாக்கர் கூறுவதாவது ‘இப்பீடத்திலிருந்து குளத்தினதும்இ அதன் தளத்தினதும் ஒரு பகுதியையும் மிக நன்கு தரிசிக்க முடியும். இவ்வாறே எதிர்த்திசையிலிருந்தும் தரிசிக்கலாம். தமிழ் ஆட்சியாளர் ஒருவரின் ஆணைக்கமைய தற்போதைய இடத்தில் இப்பீடம் வைக்கப்பட்டிருக்கலாம்.

ஐந்துதலை நாகபாம்பை வழிபட்ட நாகர்களின் கற்பனை திறனில் உருவாகிய பல சிற்ப வடிவங்கள் இருக்கின்றன. ஐந்துதலை நாகம் என்பது கற்பனை வடிவமா? என்பது ஆய்வுக்குரிய விடயமாகும் என்பது பல பொது மக்கள் மற்றும் தமிழர் வரலாற்றை நேசிப்பவர்களின் கருத்தாக உள்ளது 

நாகர்கள் இயக்கர்கள் வரலாறு

அந்தவகையில் நீர்ப்பாசனத்திற்கு பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து குளங்களைக் கட்டுவதில் தலைசிறந்தவர்களான நாகர்கள்இ இயக்கர்கள்  தங்களது காவல் தெய்வமான ஐந்து தலை நாக உருவங்களை கருங்கற்களில் பொறித்து குளக்கட்டுக்களில் வைத்து வழிபட்டுள்ளமைக்கு ஆதாரமாக பல இடங்களில் ஐந்துதலை நாகசிலைகள் உள்ளன. அந்தவகையில் பாவற்குளத்திலும் இவை உண்டு. என்கின்றனர் 

இக்குளத்தின் அணைக்கட்டில் காணப்படும் பெரிய கருங்கல்லில் ஐந்து தலை நாக பாம்பின் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. குளக்கட்டில் தனிக்கல்லில் பொறிக்கப்பட்ட நாகசிலை தற்போது குளக்கட்டின் துருசு மேல் வைத்துக் கட்டப்பட்டுள்ளது.

இதை போன்ற சிற்பத்துடன் கூடிய கல் ஒன்று செட்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள மதவுவைத்தகுளம் அணைக்கட்டில் இருக்கிறது. இக்குளங்கள் நாகமன்னர்களால் ஒரே காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம்.இந்த நீர்த்தேக்கம் யாரால் எக்காலத்தில் கட்டப்பட்டது என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை. ஆனால் நிச்சயமாக இக்குளம் பற்றி பழைய வரலாற்றுக் குறிப்புக்களில் இடம்பெற்றிருக்க வேண்டும். அப்பழைய பெயரை அறிந்தால் மட்டுமே இக்குளம் பற்றி மேலும் பல சுவாரசியமான தகவல்களைப் பெற முடியும்.

சுற்றுலாத்தலம் 

வவுனியா பாவற்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அழகாகவும் மனதுக்கு இதமாகவும் பிரமிப்பாகவும் இருப்பதனால்  விடுமுறை நாட்களில் பாடசாலை மாணவர்கள் உட்பட தமிழ் சிங்கள மக்களின் சுற்றுலாத் தலமாக பாவிக்கப்பட்டு வருகிறது  என்பது குறிப்பிடத்தக்கது 

கிட்டத்தட்ட வவுனியா பாவற்குளம் ஆனது மன்னார் குஞ்சுக்குளத்தை போன்ற அகப் புறத் தோற்றங்கள் அமைந்திருப்பது சிறப்பான அம்சமாகும் 

வவுனியா பாவற்குளம் தொடர்பாக வரலாற்றினை நேசிப்பவர்களுக்கு  தெரிந்த மேலதிக தகவல்களை கிர்ந்து கொள்வதின் மூலம் சிறந்த வரலாறுகளை அடுத்த தலைமுறையினருக்கு வழங்'க முடியும் 

நன்றி "வவுனியா எங்கள் மண்"


No comments