Page Nav

HIDE

Breaking News:

latest

மாகாண விளையாட்டுப் போட்டியில் கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயத்தின் சாதனைகள்

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்னும் மொழிக்கு ஏற்றவாறு  கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண மட்டத்தில்...

விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி என்னும் மொழிக்கு ஏற்றவாறு  கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண மட்டத்தில் நான்கு சாதனைகளைப் படைத்துள்ளது 


வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் வருடாந்தம் நடத்தப்படும் பாடசாலைகளுக்கு இடையோன பெருவிளையாட்டுப் போட்டி நிகழ்வுகளில் கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) போட்டியில் மாகாண மட்டத்தில் நான்கு சாதனைகளைப் படைத்துள்ளது

கல்வி வலயத்திற்குப் பெருமை தேடித்தந்துள்ளனர்

இந்த சாதனையூடாக பாடசாலைக்கும் கிளிநொச்சி வடக்கு வலயக்கல்வி திணைக்களத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்

இதேவேளை கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் கைப்பந்து (Hand Ball) அணியினர் தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பதும் மிகவும் பாராட்டுதலும் பெருமைக்கும் உரிய விடயமாகும் 

சிறந்த வீர வீராங்கனை

நடந்து முடிந்த குறித்த போட்டியின் சிறந்த வீரராக கிளிநொச்சி பரந்தன் இந்து மகாவித்தியாலய மாணவன் சூ.விஜயசாந் தெரிவுசெய்யப்பட்டிருந்ததுடன், சிறந்த வீராங்கனையாக அதே பாடசாலையை சேர்ந்த இ.தனுசிகா தெரிவுசெய்யப் பட்டிருந்தார்

கிளி/பரந்தன் இந்து மகா வித்தியாலயம் மாணவர்கள் பெற்ற வெற்றி விபரங்கள்

20 வயதுபிரிவு பெண்கள் அணி - முதலாமிடம்(Champion) 

17 வயதுப்பிரிவு பெண்கள் அணி - முதலாமிடம்(Champion) 

20 வயதுப்பிரிவு ஆண்கள் அணி - முதலாமிடம்(Champion) 

17 வயதுப்பிரிவு ஆண்கள் அணி - மூன்றாமிடம்(2nd Runner Up)

ஆகிய வெற்றிகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்

மேலும் கிளிநொச்சி மாவட்டமானது இறுதி யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டு சொல்லோனா துன்னப துயரங்களை அனூபவித்துமானிட வாழ்வியலில் அனைத்தையும் இழந்த நிலையில் இருந்து தற்போது மீண்டு வருகின்றார்கள் 

அந்த வகையில் மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் கலைத்துறைகளிலும் சிறப்பாக செயற்பட்டு வருகிறார்கள் 

குறித்த மாணவர்களுககு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் பாடசாலை சமூகம  தெரிவித்துக் கொள்வதுடன் சிறப்பாக பயிற்சிகளை வழங்கிய சி.கோகுலன் ஆசிரியர், பயிற்றுவிப்பாளர் செ.சோபிதன் மற்றும் விளையாட்டுப் பொறுப்பாசிரியர் சி.சசிகரன், ம.துவாரகன் ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகத்தினர் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கின்றனர்

JOURNALIST Parameswaran Kartheeban

அதுமட்டுமல்லாது  இதே மாகாண மட்ட விளையாட்டுப் போட்டிகளில் மன்னார் மாவட்டத்தில் மடு கல்வி வலயத்தின் மன்-அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தின் மாணவர்களும் நெடுந்தீவு பாடசாலை மாணவர்களும் சிற்பபாக  பங்குபற்றி வெற்றிகளை பெற்றுள்ளார்கள் 

 2024 மாகாண மட்ட எறிபந்தாட்ட போட்டியில் மன்/அடம்பன்.ம.ம.வி தடம் பதித்துள்ளது

வடக்குமாகான பாடசாலைகளுக்கு இடையிலான எறிபந்தாட்ட போட்டியில் எமது  மன்/அடம்பன்.ம.ம.வியைச் சேர்ந்த 4 அணியினர் பங்கு பற்றிக் கொண்டனர்.

. 20 வயது பெண்கள்  CHAMPION

 20 ஆண்கள்  RUNNER UP 

17 வயது ஆண்கள் RUNNER UP 

17 வயது பெண்கள் SECOND RUNNER UP

 போன்ற இடங்களைப் பெற்றுக் கொண்டனர். இம் மாணவர்களைப் பயிற்றுவித்த பயிற்றுவிப்பாளர் சு.தரன் அவர்களுக்கும் எமது பாடசாலையின் உடற்கல்வி ஆசிரியர் தேவகரன் அவர்களுக்கும் பயிற்றுவிப்பாளர் றமாபிரபா அவர்களுக்கும் இம் மாணவர்களுடன் கூட இருந்த எமது பாடசாலையின் ஆசிரியர்களுக்கும் இந்த வெற்றியை பெற்றுக் எல்லா வகையிலும் உதவி புரிந்த பாடசாலையின் முதல்வர் அவர்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பான நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்ளுகின்றோம்.

நான்கு அணியினரும் தேசியமட்ட போட்டிக்கு தெரிவு தெரிவு செய்யப்பட்டனர் 

20 வயது பெண்கள் அணியின் சிறந்த எறிபந்தாட்ட வீரங்கனையாக மன்/அடம்பன்.ம.ம.வியைச்  சேர்ந்த S.KALAICHELVI தெரிவு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது 

மேலும்  ஒரு புதிய சாதனையாக

பாடசாலைகளுக்கிடையிலான மாகாணமட்ட நீச்சல் போட்டியில் நெடுநதீவு மகாவித்தியாலய மாணவர்கள் 08 தங்க பதக்கங்களையும் 02 வெள்ளி பதக்கங்களையும் 03 வெண்கல பதக்கங்களையும் பெற்றுள்ளனர்.  

அத்துடன் இப்போட்டியில் மாகாணமட்ட அனைத்துப்பாடசாலைகளின் புள்ளி அடிப்படையில் இரண்டாம் இடத்தைப் பெற்றுநெடுந்தீவு மகாவித்தியாலயம்  சாதனை படைத்துள்ளது.

J.Sakaya vithusan(un 20) - 100m Free style  1st

J.Sakaya vithusan(un 20) - 50m Butter fly     1st

A.Jenadsanraj     (un 20) - 1500m Free style 1st 

A.Jenadsanraj  (un 20) -100m Breaststrock 1st

K.Mariya shyan (un 20) -200m Breaststroke 1st

A.Nathusan    ( un 18) - 200m Breast stroke 1st 

S.Antony Lebon (un 12) -  50m Free style    1st 

Medley Relay    (un 20) - 50m    1st 

J.Jenat Aron  (un 12) - 50m Back storke    2nd

Free style Relay (un 20) -50m    2nd 

A.Nathusan (un 18) -50m    Breast stroke   3rd

A.Nathusan (un 18) -100m Breast stroke  3rd 

S.Antony Lebon(un 12) - 50m Breast stroke 3rd

எண்ணிப் பார்க்கமுடியாத இவ் சாதனையை நெடுந்தீவு மகாவித்தியாலய நீச்சல்அணியினர் சாதித்து மாகாணமட்டத்தில் வித்தியாலயத்தினை 2,ஆம் நிலைக்கு உயர்த்தியுள்ளனர்.

இவ் இமாலய சாதனையை நிகழ்த்தி பாடசாலைக்கும்,எம் தீவுக்கும் பெருமை சேர்த்த மாணவர்களுக்கும்,ஏனைய போட்டிகளிலும் வெற்றிபெற்று இச் சாதனைக்கு கொண்டு சென்ற மாணவர்களுக்கும்,அதிபர்,ஆசிரியரகள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் அணுசரணையாளர்களுக்கும்  2005 A/L உயர்தர  மாணவர்கள் சார்பாக  வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்



No comments