Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் ஆடி அமாவாசை பிதிர்க் கடன் தீர்த்த நிகழ்வு

மன்னார் மாவட்டம்   கீரி பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடிஅமாவாசை தின தீர்த்த நிகழ்வு மிகவும் சறப்பாக நடைபெ...

மன்னார் மாவட்டம்   கீரி பிரதேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முருகன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும் ஆடிஅமாவாசை தின தீர்த்த நிகழ்வு மிகவும் சறப்பாக நடைபெறுவது வழக்கம் 

அந்த வகையில் இந்த வருடத்திற்கான  அலங்கார உற்சவ திருவிழாவும்   தீர்த்த உற்சவ தர்ப்பன நிகழ்வும் நேற்றைய (4) தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது 

இந்த நிகழ்வானது கீரி ஸ்ரீ முருகன் ஆலயத்தின் பிரதம சிவாச்சாரியார் ஸ்ரீ விஜயபாகு குருக்கள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது 

இந்த வைபவத்தில்  காலை 7 மணியளவில் பூஜைகள் ஆரம்பமாகி  9. மணிக்கு சுவாமி தீர்த்தம் காண்பதற்கு கீரி  கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு  ஆடி அமாவாசை தர்ப்பனம் செய்யப்பட்டது 

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகத்தினர் பொதுமக்கள் என்று பலரும் கலந்து கொண்டார்கள் 

ஆடி அமாவாசை ஓர் நோக்கு

ஆடி அமாவாசை இந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை "ஆடி அமாவாசை விரதம்" எனச் சிறப்புப் பெறுகின்றது.

பிதிர் தேவர்களை சிரத்தையோடு வழிபாடு செய்து சிரார்த்தம் செய்வதால் பிதிர்களின் குற்றங்களிலிருந்து "நீக்க மடையலாம்" என்பது இந்துக்களின் நம்பிக்கை.

யாழ் கீரிமலை 

யாழ்ப்பாணத்து மக்கள் புராதன காலம் தொடக்கம் கீரிமலை நகுலேச்சரத்தில் தீர்த்தமாடுவார்கள். ஆடி அமாவாசை காலத்தில் முன்னோரை நினைத்து கடல் அல்லது புனித ஆறுகளில் நீராடி வழிபட்டால் பாவங்கள் நீங்கி விமோசனம் பெறமுடியும் என்கின்ற மாறாத நம்பிக்கை  இந்து சமயத்தினரிடம் உள்ளது.

காத்தோட்டிக்காய் 

அன்றைய விரத தினத்தில்  பல வகை மரக்கறிவகைகளுடன் உணவு சமைப்பது வழக்கம் அத்துடன் விரத நாளில்“காத்­தோட்­டிக்காய்" என்னும் காயும் பொரித்துப் படைக்­கப்­படும் வழக்கம் தொன்­று­தொட்டு இருந்து வரு­கின்­றது. ஏனெனில் பிதிர்­க­ளுக்குக் கசப்­பான உணவில்  விருப்பம்  அதிகம் அதனால்தான் காத்­தோட்­டிக்­காயும் பாகற்­காயும் விர­தத்­திற்கு நிவே­தனம் செய்­யப்­ப­டு­கின்­றது என்பது மரபாகும் 

காத்தோட்டிக்காயின் மருத்துவ குணம் 

அதுமட்டுமல்லாது "காத்தோட்டிக்காய் உடலிலுள்ள வாயுவை அகற்றுவதுடன் பல வகை நோய்களுக்கும் தீர்வான மருந்தாகவும் அமைகின்றது அதன்காரணமாகவே எமது முன்னோர்கள்  உணவே மருந்து என்னும்  பொன் மொழிகளை  எமக்கு உவந்தளித்துள்ளார்கள்

ஆடி அமாவாசை அன்று தவிர்க்கப்பட வேண்டிய சில 

ஆடி அமாவாசை அன்று செய்ய கூடாத பல விடயங'களை முன்னோர்கள் வகுத்துள்ளார்கள் அவற்றில் முக்கியமான சில உங்களுக்கு தரப்படுகிறது 

முன்னோர் வழிபாட்டிற்குரிய தக்ஷிணாயன புண்ணிய காலத்தில் வரும் முதல் அமாவாசை ஆடி அமாவாசை ஆகும். அதனடிப்படையிலேயே  இந்த ஆண்டின் ஆடி அமாவாசை ஆகஸ்ட் 04ம் தேதி ஞாயிறுக்கிழமை  அதாவது நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது

இந்த  விடயங்களை செய்யாமல் தவிர்த்து விடுங்கள்  


ஆடி அமாவாசை  அன்று பிரமுகூர்த்தம் என்று சொல்லப்படுகின்ற அதிகாலை ஐந்து மணிக்கும் 4.மணிக்கும் இடையில் எழுந்து  நீராடி சுவாமி தரிசனம் செய்திருக்க வேண்டும் 

விதம் கடைப் பிடிக்கும் நீங்கள் நேரம் போக வேண்டும் என்பதற்காக  திரைப்படங்கள் பர்ப்பது சினிமா பாடல்களை கேட்பது போன்றவற்றை தவிர்த்து  இறை சிந்தனையில் அமைதியாக இருக்க வெண்டும் 

ஆடி அமாவாசை அன்று நீங்கள் பிறரிடம் கடன் வாங்கவோ அல்லது  நீங்கள் பிறருக்கு கொடுக்கவும் கூடாது  இந்த கடன்களினால் ஏற்படும் பகை தீராமல் தாடர்ந்து வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது 

 பணம் மட்டுமின்றி வீட்டில் உள்ள மற்ற பொருட்களையும் மற்றவர்களுக்கு கடனாக கொடுக்க கூடாது நீங்களும் பெறக்கூடாது என்பதை மனதில் கொள்ள வேண்டும் 

ஆடி முதல் அமாவாசை அன்றைய தினத்தில்  வாசலிலும் பூஜை அறைகளிலும் கோலம் போடக்  கூடாது என்னும் ஒரு ஐதீகம் உள்ளது  

ஆனால் வாசலில் தண்ணீர் மட்டும் தெளித்து பெருக்கி விட வேண்டும். மறந்தும் கூட வாசலில் கோலமிடுதல் கூடாது.

ஆனால் ஆடி அமாவசயான புன்னிய தினத்தில்   உங்கள் முன்னனோர்களை வணங்கி படையல் வைக்காமல் இருந்தாலும் கட்டாயமாக காகத்திற்கு உங்கள் வீட்டில் சமைத்த உணவுகளை எச்சில் படாமல் வைக்க வேண்டும் வைக்க வேண்டும் என்பது மரபு 

அத்துடன் குறிப்பாக  அமாவாசை தினத்தில்  தலைமுடி வெட்டுதல் நகம் வெட்டுதல் போன்ற செயல்களை கண்டிப்பாக செய்யக் கூடாது 

குறிப்பாக  அமாவாசை தினத்தில்   வீட்டில் அசைவ உணவுகளை சமைக்கவோ அல்லது வெளியல் வேண்டி  உண்ணவும் கூடாது. 

ஆடி அமாவாசை அன்று காலையில் வீட்டையோ சமையல் அறையையே அல்லது பூஜை அறையையோ சுத்தம் செய்யாமலட இருப்பது நல்லது என்று கூறப்பட்டுள்ளது

முன்னோர்களுக்கு படையல் போட்ட உணவுகளை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். மற்றவர்களுக்கு கொடுக்க கூடாது என்பதுடன் வெளி ஆட்களை வீட்டிற்கு அழைத்து உணவளிக்கக் கூடாது.

படையல் வைக்கும் முறை 

காகத்திற்கு சாதம் வைத்த பிறகு தான் பித்ருக்களுக்கு படையில் இட வேண்டும். அதற்கு முன்பாக படையல் இட கூடாது.

முன்னோர்களுக்கு படையல் போடும் போது ஒற்றை இலையாக போடக் கூடாது. இரண்டு இலைகள் போட்டு தான் படையல் இட வேண்டும்.

அமாவாசை அன்று பெண்கள் 

பெண்கள் தலைவிரி கோலத்துடனும்  நெற்றியில் குங்குமம் திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது.

பெண்கள் குளித்து தூய்மையாகி விளக்கேற்றிய பிறகே    சமைப்பதற்கு ஆரம்பிக்க  வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது 

ஆடிஅமாவாசை தினத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பனம் செய்வது நமது வாழ்வில் துன்பங்களை நீங்கச் செய்து  முன்னேற்றத்தை தரும்  என்பது  பழங்காலம் தொட்டு இன்று வரையான  சைவ இந்துக்களின் நம்பிக்கை 


No comments