Page Nav

HIDE

Breaking News:

latest

மன்னாரில் பட்டதாரியான இளம் தாய் பரிதாபமாக உயிரிழப்பு

மன்னார் மாவட்டம் மடுரோட் தம்பனைக்குளத்தை சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் பொது மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவி...

மன்னார் மாவட்டம் மடுரோட் தம்பனைக்குளத்தை சேர்ந்த பட்டதாரியான இளம் தாய் ஒருவர் மன்னார் பொது மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது 

இந்த சம்பவமானது நேற்றைய தினம் ஞாயிற்றுக் கிழமை  மன்னார் மாவட்ட பொது மருத்துவ மனையில் இடம் பெற்றுள்ளது

மரணமடைந்த இளம் தாய் பட்டப்படிப்பை நிறைவு செய்த  மரியராஜ் சிந்துஜா வயது (27)  என்று தெரிவிக்கப்பட்டது

சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது 

இறந்த இளம் தாய்க்கு முதலாவது ஆண் குழந்தை  மன்னார் டாவட்ட பொது வைத்தியசாலையில்  கடந்த ஒன்பதாம் திகதி பிறந்துள்ளது   11ம் திகதி  மருத்துவமனையிலிருந்து தாய் சேய் நலமாக வெளியேறியுள்ளார்கள்  7 நாட்களின் பின்னர் முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டுமாறு  கூறியதையடுத்து  கடந்த 16ம் திகதி முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டப்பட்டதாக  இறந்த பெண்ணின் தாயார் தெரிவித்தார் இவரே மருத்துவமனையில் வைத்து பராமரித்தவர் 

 குறிப்பு:- முருங்கன் வைத்தியசாலையில் தையல் வெட்டியதன் பின்னர் சில நாட்கள் குறித்த தாய் தனது வீட்டில்  இருந்துள்ளார் அதன் பின்னர் ஏற்பட்ட குருதிப் பெருக்கின் காரணமாக நேரடியாகவே நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சென்றுள்ளனர் என வைத்திய அதிகாரிகள் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டது

குருதிப் பெருக்கு

அதன்பின்னர் கடந்த சனிக்கிழமை  தாய்க்கு  குருதிப் பெருக்கு ஏற்பட்டதை அடுத்து அன்று இரவு 1.30 மணியளவில்  நோயாளர் காவு வண்டி மூலம்  மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று  ஓ.பி.டி பதிவுகளின் பின்னர் 6ம் இலக்க கட்டிலில் தங்க வைக்கப்பட்டுள்ளார் 

குருதி ஓட்டம் கட்டுப்படாமல் தெர்ச்சியாக கசிந்து கொண்டேயிருந்ததால்  விடிய காலை  ஆறு முதல் ஏழு மணியளவில் சுய நினைவு இழந்துள்ளார் அதன்பின் அவசர சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்ட போதும் நண்பகல் 11.மணியின் பின்னர் இளம் தாய் மரணித்து விட்டதாக வந்த செய்தி குடும்ப உறவுகள் அனைவரையும் ஆறாத துயரத்தில் ஆழ்த்தியுள்ளது 

பல்கலைக்கழக மாணவி 

இறந்த இளம் தாயான சிந்துஜா சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் தனு பட்டப்படிப்பை நிறைவு செய்த போதும் மட்டமளிப்பு நிகழ்வு இன்னும் நடைபெறவில்லை  குறித்த பட்டமளிப்பு நிகழ்வு இன்னும் இரண்டொரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில்  இவ்வாறு  சோக நிகழ்வை சந்தித்துள்ளது குடும்பத்தினருக்கு மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது 

குடும்பநிலை

இரண்டு சகோதரர்கள் மிகவும் கஷ்டத்தின் மத்தியில் தங்கையை படிக்க வைத்து திருமணமும் முடித்து வைத்துள்ளார்கள்  இன்னும் படிப்பிற்கான வேலைகள் கிடைக்கவில்லை திறமையான இளம் தாய் பச்சிளம் குழந்தையை தவிக்க விட்டு சென்றுள்ளதால் குடும்ப உறவுகளை மட்டுமல்லாது  கிராமத்து மக்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது

நீதியான விசாரணை செய்ய வேண்டும்

கனவுகளோடு படித்து  திருமண வாழ்க்கைக்குள் நுழைந்து உயிரிழந்த  இளம் தாய்  இனி உயிருடன் மீளப் போவதில்லை ஆனால்  இறுதி நேரத்தில் கூடவே இருந்து பராமரித்து வந்தவரும் இறந்த பெண்ணின் தாயுமானவர் தனது மகளின் இறப்பு சம்பவத்தில்  வைத்தியர்களின் கவனக் குறைவு இருப்பதாக   தெரிவித்த குற்றச்சாட்டில் ஏதனும் உண்மை இருக்கிறதா? என்று நீதியான விசாரணை செய்து உண்மைத் தன்மையை  வெளிப்படுத்த சுகாதாரத் துறையினர் முன்வர வேண்டும் 


சுகாதாரத்துறையினரின் கடமை

பொதுமக்களின் குற்றச்சாட்டுகளுக்கு சுகாதாரத்துறையினர்  முகங்கொடுத்து உரிய பதிலளிக்க வேண்டும் ஏனெனில் அண்மைய நாட்களாக  வடக்குமாகாண சுகாதாரத்துறையில்  ஏற்பட்டுள்ள சம்பவங்கள்  சுகாதாரத்துறையினர் மீது மக்களுக்கு அவநம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்









No comments