Page Nav

HIDE

Breaking News:

latest

மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓரு வருட நிறைவு சிறப்பு நிகழ்வு.

உலகம் முழுவதும் அருந்தும் ஒரு உற்சாக பானமாக இருக்கும் தேநீருக்கு பின்னால் பல லட்சம் மக்களின் உழைப்புகளும் கண்ணீர்கள் உயிர்தியாகங்கள் நிறைந்த...

உலகம் முழுவதும் அருந்தும் ஒரு உற்சாக பானமாக இருக்கும் தேநீருக்கு பின்னால் பல லட்சம் மக்களின் உழைப்புகளும் கண்ணீர்கள் உயிர்தியாகங்கள் நிறைந்து கிடக்கிறது   இந்த நவீன கொத்தடிமைத்தனங்கள் மாற்றப்பட்டு  மலையக மக்களின் வரலாற்றுச் சம்பவங்கள் பல வழிகளிலும் பேசப்பட்டு அடுத்தடுத்தத் தலைமுறையினரும் தெரிந்து கொள்ளும் வகையில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாறுகள் முறையாக  ஆவணப்படுத்தப்பட வேண்டும்

அந்த வகையில் மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28) காலை தலைமன்னாரில் இடம் பெற்றது.

இலங்கையை கட்டி எழுப்பியதில் பெரும் பங்கை வகித்த மலையக மக்கள் இலங்கை நாட்டிற்குள் வருகை தந்து  200 வது வருடத்தை ஒட்டி வேர்களை மீட்டு உரிமைகளை வென்றிட மாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வு  தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் புனித லோரன்சியார் ஆலயத்தில்  இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை(28) காலை   6.30 மணிக்கு  பங்குத்தந்தை தலைமையில் திருப்பலி  ஒப்புக் கொடுக்கப்பட்டது.

மாண்புமிகு மலையக சிவில் சமூக கூட்டிணைவு அமைப்பின் ஏற்பாட்டில் சுமார் 50க்கும் மேற்பட்ட மலையக மக்கள் தலைமன்னாருக்கு வருகை தந்து குறித்த திருப்பதியில் கலந்து கொண்டு தமது முன்னோர்களுக்கான நினைவு கூறல் மற்றும் ஓராண்டு பூர்த்தி நன்றியையும்  செலுத்தி திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

நினைவுத்தூபி 

திருப்பலியில் பின்னர் மலையக மக்கள் மற்றும் தலைமன்னார் ஊர்மனை கிராம மக்கள் ஊர்வலமாக சென்று குறித்த கிராமத்தின் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மலையக மக்களின் ஞாபகார்த்த நினைவு ஸ்தூபி இடத்தில் இன்று 7.30 மணியளவில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விளக்கேற்றி மலர் தூவி அஞ்சலி செலுத்தினர் இது ஒரு மறக்க முடியாத வரலாறாக ஒவ்வொரு வருடமும் நினைவு கூறப்பட வேண்டும் 

 குறித்த இடத்தில் மலையக மக்கள் மற்றும் மலையக மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கிராமவாசிகள் குறித்த கிராமத்தின் மதகுரு. அருட்சகோதரி மற்றும் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் உட்பட பிரதிநிதிகள் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டனர். நினைவேந்தல் மிக எழுச்சியாக முன்னெடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குறித்த குழுவினர் மன்னார் நகர பகுதிக்கு விஜயம் செய்து கடந்து வந்த பாதை பற்றிய கலந்துரையாடலில் ஈடுபட்டதோடுஇமாண்புமிகு மலையக எழுச்சி பயணத்தின் போது ஆதரவு வழங்கிய அனைத்து தரப்பினருக்கும் நட் சான்று பத்திரம் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இன்று சாதாரனமாகிவிட்ட மலைய மக்களின் வாழ்க்கையும் வரலாறுகளும் அன்றைய கனப் பொழுதுகளிள் அவ்வளவு எளிதாக இருக்கவில்லை  பல நூறு தொட்டத் தொழழிலாளர்களின் இரத்தம் வியர் உயிர்த் தியாகங்களால் இன்று மலையகமும் இலங்கை என்னும் நாடும் தலைநிமிர்ந்து நிற்க்றது என்றால் அது மிகையாகாது

ஆப்போது தலைமன்னாரிலிருந்து மாத்தளை வரை நடந்து  செல்லும் வழியில்  பசிஇ பட்டிணி நுளம்புக் கடிகளால் உண்டான கொலரா உட்பட பல்வேறு நோய்கள் காட்டு விலங்குகளின் தாக்குதல்களால்  பல ஆயிரம் தொழிலாளர்கள் மரணித்துள்ளார்கள் 

இந்த சம்பவமானது 1841 லிருந்து 1849 வரை தலைமன்னாரிலிருந்து மாத்தளைக்கு நடந்து சென்றவர்களில் 70 ஆயிரம் பேர் இறந்ததாகவும் 1823 லிருந்து 1895 வரை 2 லட்சம் பேர்  கொலரா, விஷக் காய்ச்சல்,பசி, பட்டினி,பாம்புக்கடி,காட்டு விலங்கு தாக்குதல்களால்  இறந்திருக்கிறார்கள் 

இந்த மலையகத் தோட்டங்களுக்கு இந்தியாவிலிருந்து அழைத்து வரப்பட்டவர்கள்  ராமேஸ்வரத்திலிருந்து தலைமன்னார் வந்து இறங்கி தலை மன்னாரிலிருந்து வங்காலை,அரிப்புத்துறை,புத்தளம், குருநாகல்,வழியாகவே மாத்தளை சென்றுள்ளதாக அறிய முடிகிறது 

இவ்வாறு அழைத்துவரப்பட்ட  மலைய மக்களின் வாழ்க்கை என்பது துயரங்கள் நிறைந்த மிக மோசமான ஆரம்பமாகவே இருந்துள்ளது இந்த சம்பவத்தை  தலைமன்னாரிலிருந்து காடுகள் வழியே நடந்து  போகும் போது இரண்டு பக்கமும் மண்டை ஓடுகளும், எழும்புக் கூடுகளும் குவிந்திருந்ததாக மேலும் ஒரு ஆங்கில அறிஞர் குறிப்பிட்டுள்ளார் 

சிறப்புச் சலுகைகளை வழங்க வேண்டும் 

மலையக மக்கள் அனுபவித்த துன்ப துயரங்கள் கொடுமைகள் இன்று ஏதோ ஒரு வகையில் இலங்கைளை நிமிர வைத்துள்ளது எனலாம் ஆனால் இன்று அதே  மலையக மக்கள் தங்களது உழைப்புக் ஏற்ற ஊதியம் இன்றி போராடுகிறார்கள் அவர்கள் கேட்கும் ஊதிய உயர்வை வழங்குவது கம்பனிகளின் கடமை அதற்கு ஆதரவை வழங்குவது அரசின்  உரிமை எனவே மலையக மக்களுக்கான சிறப்புச் சலுகைகளை வழங்க அரசு முன் வரவேண்டும் 

முலைய மக்களின் 200 வருடகால வாழ்க்கைப் போராட்டங்கள் தியாகங்கள் இன்று கல்வி கலை கலாச்சாரங்கள் அரசியல் என்று மலையக மக்கள் தங்களது  தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது பெருமைக்குரிய விடயம் என்று சொன்னால் அது மிகையாகாது 

சிறிமாவோ காலத்தில் மலையக மக்களின் வாக்குரிமைகள் பறிக்கப்ட்டதாக வரலாறுகள் உள்ளது ஆனால் அன்று இந்தியாவும் இல்லாமல் இலங்கையும் இல்லாமல் நின்ற துர்பாக்கிய நிகழ்வு இன்று மலைய மக்கள் இல்லை என்றால் இலங்கை அரசியல் இல்லை என்ற நிலமை வந்துள்ளது இலங்கை ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் மாபெரும் சக்தியாக மலையக அரசியலும் மக்களும் இருக்கிறார்கள் 

மக்கள் ஒன்று பட வேண்டும் 

மக்களின் எழுச்சியும் ஒற்றுமையும் எல்லா நாடுகளிலும் எல்லா சமூகங்களிடமும் தேவையான ஒன்றாகி விட்டது அதே போல் மலைய மக்களும் மேலும் மேலும் ஒற்றுமையுடன் செயற் பட்டு தங்களது உரிமைகளை வென்றெடுத்து புதியதொரு மாற்றத்தை மலைய சமூகங்களிடம் கொண்டு வர வேண்டும்  


No comments