Page Nav

HIDE

Breaking News:

latest

நடுக்கடலில் படகு மூழ்கியதில் மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த  26 ஆம் திகதி    விசைப்படகில் மீன்பிடிக்க சென்று மீண்டும் திரும்பிய போது கடும் காற்று காரணமா...

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த  26 ஆம் திகதி    விசைப்படகில் மீன்பிடிக்க சென்று மீண்டும் திரும்பிய போது கடும் காற்று காரணமாக  குறித்த மீனவர்களின் படகு மூழ்கியுள்ளது 

மூழ்கிய படகில் இருந்து டெல்வின் ராஜ் சுரேஷ்  ஆகிய இரண்டு மீனவர்கள் நீந்தி  இலங்கை கடற்படையினரின் உதவியால் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டு  விமானம் மூலம் தாயகம் திரும்பி உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மீனவர்களை தேடும் பணி தொடர்கிறது 

இந்நிலையில்  மாயமான மீனவர்கள் எமரிட் மற்றும் வெள்ளைச்சாமி ஆகிய இருவரை ராமேஸ்வரம் மீன்வளத்துறை அதிகாரிகள் அனுமதியோடு  சக மீனவர்கள்  இரண்டு நாட்களாக தேடி வந்த நிலையில் நேற்று புதன் (29)  மாலை  நடுக்கடலில்  மாயமான மீனவர் எமரிட் உயிரிழந்த நிலையில் சடலமாக  மீட்கப்பட்டுள்ளார்.

உடலை கைப்பற்றிய மீனவர்கள்  ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திற்கு உடலை எடுத்து வந்து சேர்த்தனர். 

இதையடுத்து உடற்கூற்று பரிசோதனைக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. 

மீனவ மக்களின் கோரிக்கை

விபத்த சம்பவம் தொடர்பாக ராமேஸ்வரம் மரைன் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிஜக விசாரணைகளை நடத்தி வருகின்றனர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் நடுக்கடலில் மாயமான வெள்ளைச்சாமி என்ற மீனவரை அரசு தேடித் தரும்படி கோரிக்கை விடுத்துள்ள உறவினர்கள் இறந்த மீனவர் எமரிட் குடும்பத்திற்கு அரசு நிவாரண தொகை வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் 

குறித்த மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடுவதனாலேயே இவ்வாறானான சம்பவங்கள் நிகழ்கிறது இலங்கை கடற்படை கைது செய்தால் போராட்டும் நடத்தும் மீனவர்கள்  இந்த சம்பவத்திஙற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள் என்று இலங்கை மீனவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் எது எப்படியோ உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர்களுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள் இந்த சம்பவங்களின் பின்னராவது இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பினுள்உமீன் பிடிpயில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள் 




No comments