மனிதர்களாகிய நாம் கேட்பதை தந்து நினைப்பதை நடத்தி வைக்கும் மாபெரும் சக்தி இந்த கல் உப்பிற்கு உள்ளது இந்த பிரபஞ்சம் எனும் பஞ்ச பூதங்களில் ஒன்றாக உப்பு இருக்கிறது இந்த கல் உப்பிடம் இருந்து அளப்பரிய வரப்பிரசாதங்களை பெற்றுக் கொள்வதற்கு சில வழிமுறைகள் உள்ளது அவற்றை நாம் சரியாக கடைப்பிடிக்க வேண்டும் முடிந்தளவு மிகவும் சுருக்கமாக கூறப்பட்டுள்ளது படித்துப் பயன்பெறுங்கள் உங்கள் நண்பர்கள் உறவுகளுக்கும் பகிந்து கொள்ளுங்கள்
ஒவ்வொரு குடும்பங்களிலும் எத்தனை பேர் வேலைக்குச் சென்று உழைத்தாலும் எவ்வளவு வழிகளில் பணம் வந்தாலும் சேமிக்க முடியாமல் விரும்பி பொருட்களை வாங்க முடியாமல் ஆசைப்பட்ட உணவுப் பொருட்களைக் கூட வாங்கி சாப்பிட முடியாமல் பல ஆயிரக் கணக்கான குடும்பங்கள் வாழ்வதை அவதானிக்க முடிகிறது
நல்ல வீடு கட்டி வாகனங்களுடன் வசதியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒருபுறம் இருந்தாலும் தினமும் மூன்று நேர சாப்பாட்டுக்காகவாவது பணம் கிடைக்க வேண்டும் குடும்ப உறுப்பினர்கள் பசி இல்லாமல் வாழ வேண்டும் என்று துடிப்பவர்கள் ஒரு புறம்
பெரும்பாலான குடும்பங்களில் தொடர்ச்சியாக நோய் நொடிகள் தேவை இல்லாத செலவுகள் வந்து கையில் காசு வந்தும் மிச்சம் இல்லை கடன்காரர்களின் தொல்லை பிள்ளைகளின் படிப்புச் செலவு, திருமணச் செலவு, எவ்வளவு தான் உழைத்தாலும் சேமித்தாலும் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அதே வழமையான வாழ்வை கவலையுடனும், வெறுப்புடனும், வாழ்ந்து கொண்டிருப்பவர்களை நாம் கண் முன்னே காண்கிறோம்
நீங்கள் உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கல் உப்பு எளிய பரிகாரமாக இருந்தாலும் கல் உப்பு பிரபஞ்ச ஈர்ப்பு விதியுடன் சம்பந்தப்பட்டது ஆகவே பிரபஞ்ச ஈர்ப்பு விதி பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்
நமக்கு வசதியான வாழ்வை தருவதும் நமது எண்ணங்களையும் விருப்பங்களையும் நிறைவேற்றித் தருவதும் இந்த பிரபஞ்சம்தான் அதையே பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்று கூறுவார்கள். அதாவது நமது எண்ணங்கள் மூலமாக நினைத்த பொருளை அல்லது நினைத்த வாழ்வை அடைவது மனிதர்களின் எண்ணங்கள் அனைத்திற்கும் செயல் வடிவம் கொடுப்பது இந்த பிரபஞ்சத்தின் வேலை. ஆகவே இந்த பிரபஞ்சத்தை நேசித்து பிரபஞ்சத்துடன் நெருக்கமாக இருக்க பழகிக் கொள்ள வேண்டும்
இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதி என்பது நீண்ட நெடுந்தொடர் ஆகவே ஓரிரு வார்த்தைகளின் பின் நமது பரிகார விடயத்திற்கு வருவோம்
நேர்மறை சிந்தனைகள்
எப்போதும் இந்த பிரபஞ்சத்திற்கு எதிர்மறை எண்ணங்களையும் சிந்தனைகளையும் பிடிக்காது எனவே நேர்மறையான சிந்தனைகளை வெளிப்படுத்தும் மனிதர்களுக்கு மாத்திரமே நண்மைகளை அள்ளிக் கொடுக்கும்
இது நடக்காது, அது சரிவராது ,கிடைக்காது, முடியாது, பயம், கவலை, வெறுப்பு, கோபம், இவற்றை வெளிப்படுத்துபவர்களை பிரபஞ்சம் ஒருபோதும் நேசிக்காது
எனக்கு வெற்றி கிடைக்கும் நான் நினைத்துப் போகும் காரியம் நடக்கும், நம்பிக்கை, அன்பு, அமைதி, கருணை, மன்னிப்பு, போன்ற நேர்மறை சிந்தனை உடையவர்களுக்கு இந்த பிரபஞ்சம் துணையாக நின்று அவர்களது எண்ணங்களை ஈடேற்றிக் கொடுக்கிறது இது விஞ்ஞான பூர்வமாகவும் மெய்ஞான பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்ட ஒன்று
வீட்டு பூஜை அறைகளில் உப்பு வைத்தல்
உப்பு என்பது மனிதர்களின் வாழ்வில் இன்றியமையா ஒரு பொருளாக காணப்படுகிறது ஒரு காலத்தில் தங்கத்தை விட உப்புக்கு அதிக மகத்துவம் காணப்பட்ட வரலாறுகள் உள்ளது. உப்பில்லா பண்டம் குப்பையிலே எனும் பழ மொழியும் உண்டு உப்பின் நண்மை என்ன வென்று கேட்டால் நாம் உணவில் சிறிதளவு சேர்த்துக் கொள்வதை மாத்திரம் அபலரும் சொல்வோம் உப்பில் விஞ்ஞபான ரீதியாகவும் மெய்ஞ்ஞான ரீதியாகவும் பல நண்மைகள் உண்டு நாம் அதை உணர்ந்து கொண்டு அத அதில் உள்ள நண்மைகளை பயன்படுத்திக் கொள்வதும் இல்லை
கல் உப்பின் மகத்துவம்
கல் உப்பிற்கு இந்த பிரபஞ்சத்தைப் போலவே அதிக ஈர்ப்பு சக்தி உள்ளது தன்னை நோக்கி வரும் எந்த ஒரு எதிர்மறை ஆற்றல்களையும் ஈர்த்து தன்னில் அடக்கிக் கொள்ளும்
வீட்டு பூஜை அறையில் உப்பு வைப்பதை அனைத்து மதத்தினரும் கடைப்பிடிக்கலாம்
ஆகவே வீட்டு பூஜை அறையிலோ அல்லது வீட்டுக்குள் எப்பகுதியிலும் சிறு மண் சட்டியில் கல் உப்பினை குவியலாக வைத்து ஒரு மாதத்தின் கடல் நீரிலோ அல்லது ஓடும் ஆற்று நீரிலோ கரைத்து விடுவது மிக நல்லது ஏனெனில் இந்த உப்பு வீட்டுக்குள் இருக்கும் தீய சக்திகளை தனக்குள் ஈர்த்து வைத்துக் கொள்வதுடன் வெளி நபர்கள் எவரேனும் எதிர்மறை சிந்தனைகளுடன் உங்கள் வீட்டுக்குள் வந்தாலும் அவர்களிடம் உள்ள எதிர்மறை சிந்தனைகளையும் இந்த உப்பு ஈர்த்துக் கொள்கிறது
அதை நாங்கள் ஒரு மாதம் கழித்து மேலே குறிப்பிட்டது போல் ஆற்று நீரிலோ கடல் நீரிலோ கரைத்து விடும் போது நமது வீடுகளிலும் வீட்டு உறுப்பினர்களிடமும் உள்ள தீய சக்திகளும் எதிர்மறை எண்ணங்களும் நம்மை விட்டு அகன்று செல்கிறது
அத்டதுடன் அனைவருக்கும் தெரியும் உப்பு என்பது லட்சுமியின் அம்சம் இவ்வாறு எதிர்மறை சிந்தனைகளும் தீய சக்திகளும் நமது உள்ளங்களில் இருந்து இல்லங்களில் இருந்தும் விலகிச் செல்லும் போது உப்பு என்பது வளரும் தன்மையுடையது நாளுக்கு நாள் உங்களை அறியாமலேயே உங்களது கஷ்டங்களும் துன்பங்களும் நீங்கி நிம்மதியும் செல்வ வளங்களும் பெரும்
பணச் செலவுகள் இல்லை
“நீர் சூழ் உலகு” என தமிழ் மொழியில் ஒரு வாக்கியம் உண்டு. இந்த உலகம் 73 சதவீதம் கடல் நீரால் தான் சூழப்பட்டிருக்கிறது. இந்த கடல் மனிதர்களுக்கு பல நன்மையான விடயங்களை தந்து கொண்டிருக்கிறது. இந்து மத வேதங்கள் மற்றும் சாத்திரங்களில் கடல் ஒரு ஆன்மீக முக்கியத்துவம் பெற்ற ஒரு இடமாக கருதப்படுகிறது. அந்த கடலிலிருந்து மனிதர்கள் உண்ணும் உணவை ருசியூட்டவும் மற்றும் பல நன்மைகளை வழங்கும் வகையில் பெறபட்ட ஒரு பொருள் தான் “உப்பு”. அந்த உப்பின் ஆன்மீக, தாந்திரீக ரீதியான பயன்களை பற்றி இங்கு சித்தர்களின் குரல் வாயிலாக தெரிந்து கொள்வோம்.
பொதுவாக ஒருவீட்டில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்க வேண்டுமென்றால், அந்த வீட்டில் உப்பு நிறைந்திருக்க வேண்டும் என்று நம் பெரியவர்கள் கூறுவார்கள். ஏனென்றால் லட்சுமி தேவி கடலில் தோன்றியவள் என்று நம் அனைவர்க்கும் தெரிந்திருக்கும். அதேபோல் உப்பும் கடலில் தோன்றக்கூடிய பொருள் என்பதால் உப்பினை லட்சுமி தேவி என்று கூறுகின்றனர். இதன் காரணமாக தான் வீட்டில் எப்பொழுதும் உப்பு இருக்க வேண்டும் என்று கூறுவார்கள்.
வீட்டில் பணப்புழக்கம் அதிகம் இருக்கவும், செல்வ நிலை உயரவும் நம் வீட்டிற்கு மாதா மாதம் வாங்கும் பொருட்களில் “மகாலட்சுமியின்” அம்சமான “கல் உப்பை” முதலில் வாங்கும் வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். மேலும் வீட்டில் எப்போதும் இந்த உப்பு சுத்தமாக தீர்ந்து போகாமல் படி பார்த்து கொள்ள வேண்டும்.
எல்லா சமயங்களிலும் குறிப்பாக வெள்ளிக்கிழமைகளில் உப்பை தரையில் சிந்தாத வாறு பார்த்து கொள்ள வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் கல்லுப்பை சிறிது எடுத்து வீட்டில் மகாலட்சுமியின் படத்திற்கு முன் வைத்து வணங்குவது அந்த தேவியின் அருளை பெற்று தரும்.
முற்காலத்தில் வீட்டிலிருந்த வயதான பெண்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமைகளில் வீட்டிலுள்ள அனைவரையும் வரவழைத்து, ஒன்றிரண்டு காய்ந்த மிளகாயையும் சிறிது கல்லுப்பையும் எடுத்துக்கொண்டு, அனைவர்க்கும் திரிஷ்டி சுற்றி அந்த உப்பையும் மிளகாயையும் தீயிட்டு கொளுத்துவர். அப்போது அவையிரண்டும் பொறித்துக்கொண்டு எரிந்தால் நம்மிடமிருந்த மிகுந்த தீய அதிர்வுகளை அது ஈர்த்துக்கொண்டுள்ளது என அறியலாம்.
எனவே ஒவ்வொருவரும் வாரத்திற்கு ஒரு முறையாவது இந்த திரிஷ்டி சுற்றல் முறையை செய்துகொள்வது நமது சக்தி உடல்களிலிருக்கும் தீய பாதிப்புகளை நீக்கும்.
நமது உடலை சுற்றி சாதாரண மனித கண்களுக்கு புலப்படாத சூட்சம சக்தி உடல்கள் இருக்கின்றன. இந்த சக்தி உடல்கள் நாம் தினமும் வெளியில் சென்று பல்வேறு இடங்களில் புழங்கும் போது அந்த இடங்களின் தீய அதிர்வுகளும், மேலும் நமக்கு நெருக்கமாக வரும் பல வகையான மனிதர்களின் எதிர்மறை அதிர்வுகளை நமது இந்த சக்தி உடல்கள் ஈர்த்துக்கொள்கின்றன.
இந்த கீழான அதிர்வுகள் நமது சக்தி உடல்களில் தங்கி, நமக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே இவற்றை நீக்குவதற்கு நாம் தினமும் குளிக்கும் போது பயன்படுத்தும் நீரில் சிறிது கல் உப்பை ஒரு தேக்கரண்டி அளவு கரைத்து கொண்டு அந்த நீரில் குடிக்க வேண்டும்.
அது போல் நம் வீட்டில் சேர்ந்திருக்கும் தீய அதிர்வுகள் மற்றும் சக்திகளை போக்குவதற்கு நாம் வாரம் ஒரு முறை, வீட்டின் தரை பகுதிகளை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்ய வேண்டும். அப்போது அந்த நீரில் சிறிது கல்லுப்பை போட்டு கரைத்து அந்நீரை கொண்டு வீட்டை கழுவி சுத்தம் செய்வதால் வீட்டிலிருந்த தீய அதிர்வுகள் நீங்கும்.
மேலும் நமது வீட்டை துஷ்ட சக்திகள் எப்போதும் தாக்காத வகையில் இருக்க நான்கு சிறிய கண்ணாடி அல்லது பிளாஸ்டிக் குடுவைகளை எடுத்துக்கொண்டு அந்த குடுவைகளில் சிறிதளவு கல்லுப்பை இட்டு காற்று புகா வண்ணம் அந்த குடுவைகளை நன்கு மூடி, வீட்டின் வெளிப்புற சுற்று சுவற்றில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்கு திசைகளில் நான்கு குடுவைகளை வைத்து விட வேண்டும்.
அந்த குடுவைகளை நாம் அடிக்கடி சோதித்து பார்க்கும் போது, எந்த திசை பக்கம் இருக்கும் குடுவையில் உப்பு விரைவாக கரைந்து போயுள்ளதோ, அந்த திசை வழியாக நமக்கு ஏற்பட இருந்த பாதிப்பை அந்த குடுவையிலுள்ள கல்லுப்பு ஏற்றுக்கொண்டதாக அர்த்தம்.
எனவே கரைந்து போன அந்த உப்பை நீக்கிவிட்டு புதிய கல்லுப்பை அதில் போட்டு மூடி மீண்டும் அதே திசையில் அதை வைத்து விட வேண்டும். இப்படி நமது வாழ்வில் ஆன்மீக ரீதியாக உப்பு நமக்கு பல வகையில் பயன்படுகிறது
இந்த பிரபஞ்ச ஈர்ப்பு விதியோடு உப்பு தொடர்பாக நாம் செய்யும் விடயங்கள் உடனடியாக தீர்வை தந்து விடுமா என்றால் இல்லை. இவற்றை நாங்கள் தொடர்ச்சியாக செய்து வரவேண்டும் அத்துடன் நமது செயற்பாடுகளின் பொது நேர்மறையான எண்ணங்களுடன் முயற்சி செய்ய வேண்டும் இதை முயன்று பார்ப்பதால் அத்தனை பிரச்சனைகளும் தீர்ந்து கோடீஸ்வரர் ஆகி விடுமா? என்றால் அதுவும் இல்லை அது நமது சிந்தனை மற்றும் முயலும் தன்மையை பொறுத்து பலன் கிடைக்கும் இவை பிரபஞ்சத்துடன் சம்பந்தப்பட்டது கிட்டத்தட்ட இதுவும் ஓர் பிரபஞ்ச ஈர்ப்பு விதிதான்
எனவே பெரிய பணச் செலவுகள் இல்லாமல் எளிதாக கிடைக்கும் உப்பை வைத்துக் கொண்டு உங்களது வாழ்வை வளமாக்கிக் கொள்ளுங்கள்
இந்த தகவல்களை உங்கள் உறவுகள் நண்பர்களுக்கும் பகிர்ந்து அவர்களையும் பலனடையச் செய்யுங்கள்