இலங்கையில் தினமும் ஏற்படும் விபத்தினால் உயிரிழப்பவர்களும் அவையங்களை இழக்குளவிற்கு கொடூர விபத்துக்களை சந்திப்பவர்களும் அதிகமாகிக் கொண்டே போவதை காணக் கூடியதாக உள்ளது
இலங்கையில் ஒரு நாளைக்கு 10க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டு அதில் சரி அரைவாசி நபர்கள் உயிரிழந்து விடுகிறர்கள் விபத்துக்கள் ஏற்படுவதற்கு இதுதான் காரணம் என்று கூறமுடியாதளவிற்கு பல காரணங்கள் உள்ளது
அவை விபத்து தொடர்பான விழிப்புணர்வுகள் இல்லாமை, வாகனம் ஓட்டுவதில் போதிய அனுபவம் இல்லாதது, அதிவேகம், போதையில் வாகனம் ஓட்டுவது, வீதி ஓரங்களில் காட்டப்பட்டுள்ள சமிக்ஞை குறியீடுகளை அவதானிக்காமை, தூக்கக் கலக்கம், வாகனம் ஓட்டும் போது தொலைபேசியில் உரையாடுவது, பூச்சிகள் தாக்குவது, போன்றவை மிகவும் முக்கிய காரணங்களாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது
விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வுகள்
உயிர்கள் பெறுமதியானவை தாய், தந்தை ,சகோதர, சகோதரிகள், அல்லது உறவுகள், நண்பர்கள், என்று யாருக்கேனும் விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழந்தாலோ அல்லது அங்க, அவயங்களை இழந்து இயங்க முடியாத நிலைக்கு சென்றாலோ, குறித்த குடும்பம் மிகவும் பாதிப்பிற்குள்ளாகிறது
ஒரு வேளை விபத்துக்குள்ளான நபர் மூலம் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை பெறும் நிலையில் இருந்தால் அந்த குடும்பத்தின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பதை சிந்திக்க வேண்டும்
குடும்பத்தினர் நிலை
ஏற்கனவே தொழில், வேலை வாய்ப்புகள், போதிய வருமானங்கள், இல்லாமல் பாடாய் படும் குடும்பங்களில் இவ்வாறான விபத்துக்கள் நேர்ந்து விபத்தக்குள்ளான நபர் இறக்காமல் அவயங்களை இழந்து இயங்கமுடியாமல் இன்னும் ஒருவர் தயவில் வீட்டினுள் முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டால் அந்த குடும்பத்தின் நிலை என்ன? அவ்வாறு முடங்கிக் கிடப்பவரின் நிலை என்ன? என்பதனை வாகனம் ஓட்டுவதற்கு தயாராக உள்ள அனைவரும் சிந்திக்க வேண்டும்
நாம் ஒருவர் விடும் தவறுகளால் நமது குடும்பத்திள் உள்ளவர்களே பாதிப்புகளையும், சிரமங்களையும் எதிர்கொள்வர்கள் தொழில் வருமானங்கள், வாழ்வாதாரங்கள், இல்லாமல் தவிப்பதோடு மட்டுமல்லாமல் விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், நீ திமன்ற செலவுகள், வாகனங்களை சரி செய்ய ஏற்படும் செலவுகள், என்பவற்றால் கடனாளியாவார்கள் அதனால் எதிர்காலத்தில் சமூகங்களின் முன் அவமானப்படுவார்கள் என்ற ஒரு அச்ச நிலை உங்களுக்கு எழவேண்டும்
வானம் ஓட்டுவதில் போதிய அனுபவம் இல்லாமை
எந்த ஒரு வாகனமாக இருந்தாலும் அதை ஓட்டிப் பார்ப்பதற்து ஒவ்வொருவருக்கும் ஆசை இருப்பது இயல்பு அதற்காக தூரபிரதேசங்கள், அதிவேக பாதைகள், வாகன நெரிசல்கள், உள்ள இடங்களில் வாகனங்கள் ஓட்டுவதில் அனுபவம் இல்லாதவர்கள் வாகனங்களை செலுத்திச் செல்வதை தவிர்க்க வேண்டும் தற்போது நிகழும் பெரும்பாலான கொடூர விபத்துகளுக்கு இவ்வாறு அனுபவம் இல்லாத புதியவர்கள் வாகனங்களை செலுத்துவதே காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது
தூரப்பிரதேசங்கள் செல்லும் போது உங்கள் உறவினர்கள் நண்பர்கள் ஆசையில் கேட்கிறார்கள் என்பதற்காக வாகனங்களை கொடுப்பதால் அது அனைவருக்கும் பேராபத்தாக அமைகிறது
அதிக வேகம்
வாகம் ஓட்டுவதில் அதிவேகம் என்பது நிச்சயமாக தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று அனுமதிக்கப்பட்ட வேகத்தினுள் செல்லும் போது தவிர்க்க முடியாமல் ஒரு விபத்து நேர்ந்துவிட்டால் ஓரளவு உடம்பில் காயங்களுடனும், வாகனங்கள் பெரிதாக சேதமடையாமலும் தப்பித்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது
நீங்களும் மித மிஞ்சிய வேகத்துடன் போகும் போது வாகனங்கள் பாவிக்க முடியாதளவுக்கு சேதமாவதுடன் வாகனங்களில் பயணிப்பவர்களும் கொடூர மரணங்களை சந்திக்க நேரிடும் ஆகவே எந்த வாகனமாக இருந்தாலும் அனுமதிக்கப்பட்ட வேகத்துள் செல்வது சிறந்தது
குறிப்பாக மிகவும் அவசரமாக இடத்துக்கு செல்ல வேண்டிய இடங்களுக்கான நேரம் தூரம் போன்றவற்றை கணித்து பரபரப்பாக பதட்டத்துடன் செல்லாமல் குறிக்கப்பட்ட நேரத்திற்கு அரை மணித்தியாலம் அல்லது ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாக உங்கள் பயணத்தை அமைதியாக ஆரம்பிக்கும் போது விபத்துக்களையும் ஆபத்துக்களையும், உயிர்ச் சேதங்களையும், தவிர்த்துக் கொள்ளலாம்
போதையில் வாகனம் செலுத்துதல்
இந்த பிரபஞ்சத்தில் மனிதன் விதிக்கப்பட்ட ஆயுளுக்குள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், வாழ வேண்டும் என்பதற்காக கடவுளால் படைக்கப்பட்டுள்ளான்
யாரோ ஒருவர் மது போதையில் நிதானம் இல்லாமல் ஏற்படுத்தப்படும் விபத்துக்களால் கர்பிணிப் பெண்கள், சிறியவர்கள் என்று வேறு ஒரு குடும்பம் பாதிக்கப்படுகிறது
அதிலும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் ஏற்படுத்தப்படும் விபத்துக்கள் மது போதையில் வானம் செலுத்தி ஏற்படுத்தப்பட்டவை என்று கனிசமான பதிவுகள் உள்ளது எனவே போதையுடன் வாகனங்களை செலுத்தாதீர்கள் அவ்வாறு செலுத்தும் நபர்களை ஊக்கப்படுத்தாதீர்கள்
தூக்கக்கலக்கம்
பெரும்பாலான விபத்துகள் இந்த தூக்கக் கலக்கத்தின் மூலமே நிகழ்கிறது தூரப் பிரயாணங்கள், இரவு நேரப் பிரயானங்களின் இந்த விபத்துகள் நிகழ்வது வழமையாக உள்ளது
பயணிகள் பேருந்து பொருட்கள் ஏற்றி இறக்கும் கனரக வாகனங்கள் மோட்டார் சைக்கிள் உட்டபட பல வகையான வாகனங்களும் இதில் அடங்குகிறது வாகனம் செலுத்தும் ஓட்டுனருக்கு நிச்சயம் தனக்கு கண்கள் சோர்வாகி தூக்கம் வருவது ஓரளவுக்கு விளங்கும் அந்த நேரத்தில் தொடர்ந்தும் வானத்தை செலுத்தாமல் ஓரிடத்தில் வாகனத்தை நிறுத்தி முகத்தை கழுவி ஓய்வு எடுத்த பின் வாகனத்தை செலுத்துவது நல்லது
ஏனெனில் உங்களை நம்பி பல உயிர்கள் நீங்கள் செலுத்தும் வாகனங்களில் இருக்கிறார்கள் வாகனத்தை நிறுத்தி ஓய்வு எடுத்தால் மட்டுமே தூக்கக் கலக்கத்தை இல்லாமல் செய்ய முடியும் வாகனத்தை செலுத்திக் கொண்டு கண்களை துடைப்பதாலோ, முகத்தை கழுவுவதாலோ, தூக்கக் கலக்கத்தை இல்லாமல் செய்ய முடியாது
இவ்வாறான தூக்கம் இரவு நேரங்களில் வருவது வழமை என்றாலும் பகல் நேரங்களில் உணவின் பின் உடனடியாக வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பது நல்லது
சிறு பூச்சிகள் தாக்குவது
அதிகமாக மோட்டார் சைக்கிள் விபத்துகள் இந்த பூச்சிகள், வண்டுகள், கண்களில் தாக்குவதன் மூலம் நிகழ்கிறது இதை எவரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை விபத்துக்குள்ளானவர் அதிகவேகமாக வந்திருப்பார் அல்லது போதையில் வந்திருப்பார் என்று நாங்களாகவே நினைத்துக் கொள்கிறோம்
பெரும்பாலான விபத்துக்கள் விபத்தை ஏற்படுத்தியவர்களுக்கு மட்டுமே தெரியும் எனவே உந்துருளி என்னும் மோட்டார் சைக்கிள் பாவிக்கும் ஆண், பெண் அனைவரும் சாதாரண கண்ணாடிகளை பாவிப்பது நல்லது கண்களில் தூசி படுவதற்காக வெயிலுக்காக, மட்டுமல்ல பூச்சிகள், வண்டுகள், உங்கள் கண்களில் தாக்கி விபத்துக்களை ஏற்படுத்தாமல் இருப்பதற்காகவும்தான்
இறுதியாக
மனிதப் பிறவி என்பது மிகவும் பெறுமதியானது இவ்வாறானான விபத்துக்கள் மூலம் அகால மரணம் அடைவது இந்த மனிதப் பிறப்பிற்கு நீங்கள் செய்யும் துரோகம் இந்த பூமியில் வாழ்வதற்கு நல்ல உடல் கிடைக்காமல் எத்தனையோ ஆன்மாக்கள் அலைந்து திரிகிறது கிடைத்திருக்கும் உடலை நல்லமுறையில் பாதுகாத்து மனிதப் பிறவியை மகிழ்ச்சியாக, அமைதியாக, நிம்மதியாக, வாழ்வதற்கு முயற்சி செய்யுங்கள்
நன்றி
ஜெகன் ஊடகவியலாளன்