மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய வரலாற்று ஆய்வு நூல் வெளியீடு

18 / 100 SEO Score

மன்னார் ரோட்டரி கழகத்தின் நிதி அனுசரணையில் மன்னார் ஊடகவியலாளர் ஜெகன் எழுதிய மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும் என்னும் சங்க இலக்கிய நூல்கள் மூலமாக  இடப்பெயராய்வு நுலானது மன்னார் ரோட்டரி கழகத்தின் தலைவர் பொறியியலாளர் ரொபேட் பீரிஸ் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்  23-4-2024 செவ்வாய் கிழமை காலை பத்து மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஜெய்க்கா மண்டபத்தில் வெளியீடு செய்யப்பட்டது

7b3ed9ed 5829 4bd0 9a0d dc56902f2a91

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினரான மன்னார் மாவட்டச் செயலாயர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டதோடு  சிறப்பு விருந்தினர்களாக மன்னார் நகர பிரதேச செயலாளர் ம.பிரதீப் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் டெ.க. அரவிந்தறாஜ் மடு பிரதேச செயலாளர் கீதபொன்கலன் நிஜாகரன்  மன்னார் சட்டத்தரணி செல்வராஜா டினேசன் போன்றோர் கலந்து கொண்டனர்

இந்த நூலானது  மகாவம்ச விஜயனும் 700  தோழர்களும்  இலங்கையில் வந்து இறங்கிய இடமானது மன்னார் கட்டுக்கரை  கட்டுக்கரை பிரதேசம் என்பதை சங்க கால இலக்கிய நூல்களான கம்பராமாயணம் தொல்காப்பியம் உட்பட மகாவம்ச நூல்களின் ஆதாரத்தோடும் தற்கால வரலாற்றாசிரியர்கள் வெளியீடு செய்த நூல்களின் துணையோடு  கூறப்பட்டுள்ளது

மேலும் இந்த கட்டுக்கரை பிரதேசத்தின் தோற்றம் வளர்ச்சி  அதன் சிறப்பு குன்றியதற்கான காரணங்களை  கம்பராமாயணம் மகாவம்ச    நூல்கள் கூறும் இடப்பெயர்களையும் தற்போது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் இடம் பெயர்களையும்  ஒப்பிட்டு ஆய்வு நூலாக வெளி வந்துள்ளது

DSC 0455

இந்த நூல் ஆய்வினை  மன்னார் கல்வி வலய ஆசிரிய ஆலோசாக்  சந்திர லிங்கம் ரமேஷ் அவர்கள் வழங்கியிருந்தார்

DSC 0468

இந்த நூலின் பிரதிகளை  பாடசாலைகள் நுலகங்கள் பல்கலைக்கழக  மாணவர்களுக்கு வழங்குவதற்காக மேலதிக அனுசரணைகளை   மன்னார் சட்டத்தரணி  செல்வராஜா டினேசன் வங்காலை புனித ஆனாள் கல்வி சமூக அபிவிருத்தி குழுவினர் லட்சுமிகரங்கள் தொண்டு நிறுவனத்தினர்  செட்டிகுளம் பிரதேச சமூக சேவையாளர் ஜெகன் சிவானந்தராசா போன்றோர் வழங்கியிருந்தார்கள்

இந்த நிகழ்வில் மன்னார் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள் கலைஞர்கள் கலை இலக்கிய ஆர்வலர்கள் கலைஞர்கள்  போன்றோர்கள் கலந்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

DSC 0501
DSC 0504
DSC 0520
IMG 2170
IMG 2164

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *