உலக படைப்பியக்கத்திலும் சரி, அதன் பின்னரான ஈழத் தமிழர்களின் வாழ்வியல்களிலும் சரி, அவர்கள் ஒரு தேசிய இனமாக கலை கலாச்சார பண்பாட்டு விழுமியங்களில் சிறந்து விளங்கி மிகவும் பெருமைமிக்க வரலாற்றின் தொன்மையுடன் வாழ்ந்து வந்துள்ளதை சங்க கால இலக்கிய நூல்கள் மூலமாக அறிய முடிகின்றது
ஆனால் அந்த சங்க கால இலக்கிய நூல்கள் கூறும் தமிழர்கள் சார்ந்த அனைத்து விடயங்களும் ஈழத் தமிழர்களை குறிக்கிறது என்பதனையும் உணர்ந்து கொள்ள முடிகிறது
அந்த வகையில் மன்னார் என்கின்ற மாதோட்ட மண்ணின் இடப்பெயர்கள் மற்றும் மக்களின் வாழ்வியல்களை வைத்து இந்த பேசாலை கிராமம் பழங்காலத்தில் எவ்வாறு இருந்தது,அதற்கு பிற்பட்ட காலங்களில் எவ்வாறு இருக்கின்றது மற்றும் அதனுடைய தொன்மங்களை அலசி ஆராய்ந்து இந்த ஆய்வு கட்டுரை எழுதப்படுகிறது.
“பேசாலை” பழங்கால உல வர்த்தகத்தில் மிகவும் முக்கிய பங்கு வகித்த ஒரு சிறு நகரம்
பேசாலை நகரத்தின் தொன்மை சிறப்பு பெருமை பற்றி மறந்தும் மறக்கடிக்கப்பட்டும் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்
இந்த பேசாலை சிறு நகரம் என்பது மன்னார் மாவட்டத்தின் நகர பிரதேச செயலாளர் பிரிவில் பல கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடிடக்கி அமைந்திருக்கும் மிக முக்கியமான நகரமாகும்
இன்று எவராலும் பேசப்படாமலிருக்கும் இந்த பேசாலை கிராமமானது பழங்காலத்தில் மாந்தை மற்றும் கட்டுக்கரை துறைமுகத்திற்கு இணையான செல்வாக்குமிக்க துறைமுக நகரமாக இருந்துள்ளது
இன்றைய மன்னார் மாவட்டத்திலுள்ள சிறு சிறு கிராமங்களுக்கும் முன்னாளில் பாரியதொரு வரலாற்று தொன்மை இருப்பது போல இந்த பேசாலை கிராமமும் வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து மிகவும் பெருமதி வாய்ந்ததொரு பூமியாக இருந்திருக்கிறது
இலங்கையின் வட கடலையும் ,தென்கடலையும், இணைக்கும் முக்கியமான புள்ளியாக இந்த பேசாலை மற்றும் அதனை சுழவுள்ள கடற் பிரதேசங்கள் காணப்படுகிறது. இங்கே பவளப் பாறைகள் மற்றும் கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக காணப்படுவதுடன் அதிகளவான மீன் பாடுகள் நல்ல தொழில் வளங்களும் இங்கு உண்டு
தமிழ்நாட்டையும் இலங்கையையும் ஒரு ஆறு பிரிப்பதாக ஈவேர்ஸ் என்னும் வரலாற்று அறிஞர் கூறியிருந்தார்.இவை தொடர்பாக இடப்பெயர்கள் மூலம் ஆய்வு செய்து வெளியீடு செய்த “மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசமும்” என்னும் நூலில் இவை தொடர்பாக ஆதாரத்தோடு விளக்கமளிக்கப்பட்டுள்ளது
ஆதிகாலம் தொட்டு மீன்பிடி தொழிலை முதன்மை தொழிலாக கொண்டிருந்தாலும் இப்பகுதியில் கற்பகதரு என்னும் பனைமரங்கள் அதிகமாக இருப்பதால் பனைமரம் சார்ந்த தொழில்களும் மிகவும் சிறப்பாக நடைபெற்றிருக்கிறது என்பதனை பழைய வரலாறுகள் மூலம் அறிய முடிகிறது
கம்பராமாயணம் நூல் இந்த மன்னார் மாவட்டத்தை கற்பக நாடு என்று கூறுகிறது அதற்கு இந்த பேசாலை நகரமும் ஒரு காரணம்
பேசாலை என்னும் இடப் பெயருக்கான அர்த்தங்களை செவி வழி கதைகளாக பலரும் பலவிதமாக கூறினாலும்
எமது தேடலில் கிடைக்கப்பெற்ற ஆதாரமாக முன்னைய காலத்தில் இப்ப பகுதிகளில் தாழை மரங்கள் அதிகமாக காணப்பட்டுள்ளது
பேசாலை என்பதின் முதல் எழுத்துக்கான அர்த்தம் “பே”என்றால் அழகு, அச்சம், நுரை,மேகம்,பேசாலை, என்பதுடன் ஒரு அழகான பூமியாக இருந்திருக்கிறது
“பே”யம் என்றால் “மன்றம்” என்று ஒரு பொருள் உண்டு
அச்சம் என்றால் மாதோட்டம் முழுவதும் நாகர்களும் யட்சர்களும் வாழ்ந்திருக்கிறார்கள் வெளி மனிதர்களை அவ்வளவு எளிதாக உள்நுழைய விடமாட்டார்கள்
மாதோட்டத்தின் பல பகுதிகளில் கடற்கொள்ளையர்களும் வாழ்ந்துள்ளார்கள் இவர்கள் வெளிநாடுகளிலிருந்து மாதோட்ட துறைமுகத்திற்கு வரும் கப்பல்களை கொள்ளையிட்டு தங்களது மக்களுக்கு பகிர்ந்தளிக்கும் செயற்பாடுகளை செய்துள்ளார்கள் இவை ஏனையவர்களுக்கு அச்சமூட்டுவதாக உள்ளது
நுரை என்பது இப்பகுதி கடல் என்பதால் நுரை என்பது இயற்கையாகவே அமையும் அத்துடன் ஒவ்வொரு எழுத்துக்கான அர்த்தங்களும் இன்றை பேசாலையின் நிலத்துடன் தொடர்பு பட்டிருப்பதை அவதானிக்க முடியும்
மேகம் என்பது அழிந்துது போனதாக கருதப்படும் இலெமூரியா அல்லது குமரிக்கண்டத்தின் எச்சமாக மன்னார் இருக்கிறது இது தொடர்பான விளக்கமும் மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுஇக்கரை பிரதேசமும் என்னும் நூலில் தரப்பட்டுள்ளது
இங்கு சாலை மீன்கள் அதிகமாக பிடிடுவதால் இப்பெயர் உருவாகியதாக செவி வழிக் கதைகளும் உண்டு
இப்பகுதியில் முன்னைய நாளில் தாழை மரங்கள் அதிகமாக காணப்பட்டுள்ளது இந்த தாழை மரங்கள் கடற்கரை பிரதேசங்களிலேயே அதிகமாக காணப்படுத் உதாரணமாக யாழ்ப்பாணத்தில் இயற்றாழை மற்றும் தாழையடி என்னும் இடப்பெயர்கள் இருக்கிறது ஆகவே இங்கு பேய்த்தாழை மருவி பேசாலை ஆகியிருக்கலாம் என்பது ஒருசாரார் கருத்து
ஆனால் சாலை என்பதற்கு அர்த்தம் பல இருந்தாலும் இது முக்கியமாக போக்குவரத்து வீதியினையே குறிக்கிறது என்பது எமது கருத்து.
தற்கு உதாரணமாக பேசாலை மற்றும் தலைமன்னார் வீதிகளில் இரு மருங்கிலும் பணைமரங்கள் நேர்த்தியாகவும் அழகாகவும் நிற்கும் அதனால் இதற்கு பணைச்சாலை என்னும் காரணம் மற்றும் குறியீட்டுப் பெயர்களும் உண்டு
அத்துடன் விவசாய தொழிலில் ஈடுபடும் பெண்களை ஆய்ச்சியர் ஆய்மகள் என்று கூறுவார்கள் அதேபோல் கடல் தொழிலில் ஈடுபடும் பெண்களை பேய்ச்சியர் என்று கூறுவார்கள்
இந்த பேச்சியர் சாலை தோறும் தங்களது மீன் கருவாடுகளை விற்பனைக்காக கூடைகளிலும் சிறு கூடாரங்களிலும் வைத்து விற்பனை செய்வார்கள் இந்த பேய்ச்சியர் சாலை என்பது பின்னாலே பேசாலையாக மருவி இருக்கலாம் என்று கதிர் தணிகாசலம் அவர்கள் எழுதிய தமிழர் வரலாறும் இலங்கை இடப்பெயர் ஆய்வும் என்னும் நூலில் கூறப்பட்டுள்ளது
அதுமட்டுமல்லாது உலக வர்த்தக மையமாகவும் இயற்கைத்துறைமுகமாகவும் மன்னார் மாவட்டம் இருந்த போது இந்த பேசாலை பகுதி ஆனது பிரதான கடல் போக்குவரத்து சாலையாக இருந்திருக்கிறது வெளி நாட்டு வர்த்தகர்களுக்கும் கப்பல்களுக்கும் பெரிய பிரதான சாலையாக இந்த பேசாலை திகழ்ந்திருக்கிறது
இது மட்டுமே காரணமும் அர்த்தமும் இல்லை பேசாலை என்பதற்கான அர்த்தம் இன்னும் பல வழிகளில் கூறப்படுவது உண்டு
பழைய மாதோட்டத்தில் கட்டுக்கரை, மாந்தை,சிலாபத்துறை, வங்காலை, தலைமன்னார், உட்பட கரையோர பிரதேசங்கள் துறைமுக செயற்பாடுகளில் எவ்வாறு சிறப்புற்று இருந்ததோ அதை போலவே இந்த பேசாலை நகரமும் வியாபாரத்திற்காக மட்டுமல்ல சன நெரிசல்களினால் இரவு பகலாக மக்கள் கூட்டம் நிறைந்த வண்ணமே காணப்படும்
கிறிஸ்துவுக்கு முற்பட்ட பண்டைய காலத்தில் இன்றைய இலங்கையானது இலங்கை எனும் பெயர் பெறுவதற்கு முன்பாக மாதோட்டம்,தாமிரபரணி, இன்னும் பல பெயர்களால் அழைக்கப்பட்ட காலத்தில் கடற்தொழில் மட்டுமல்லாது பனை, தென்னை போன்ற இயற்கை வளங்களில் இருந்து கிடைக்கும் கள்இறக்குதல்,பனங்கட்டி தயாரித்தல், பனை ஓலைகளில் செய்யப்படும் வீட்டுப் பாவனை பொருட்கள்,என்று பலவாறான சுய பொருளாதாரத்திலும் உள்ளூர் பண்டமாற்று வியாபாரங்களில் இந்த மக்கள் சிறந்து விளங்கியுள்ளார்கள்
அதாவது இப்பகுதியில் மக்களுக்குக் கிடைக்கும் கடல் உணவுகளாக மீன், கருவாடு,உட்பட பலவிதமான கடல் உணவுப் பொருட்களையும் பனை சார்ந்த உற்பத்தி பொருட்களையும் வெளிநாட்டு வியாபாரிகளுக்கு கொடுத்து பண்டமாற்று வியாபாரம் செய்தது மட்டுமல்லாது மாதோட்ட பெருநில பரப்புப் பகுதிகள் யாழ்ப்பாணம், வன்னி, மட்டக்களப்பு, போன்ற பகுதிகளுக்கும் சென்று தங்களது உற்பத்தி பொருட்களை கொடுத்து கடற்கரை பிரதேச மக்களுக்கு தேவையான அரிசி,நெல், மரக்கறிவகைகள், பழ வகைகள்,தேன் இறைச்சி, போன்ற வேட்டை பொருட்களையும் பெற்று தங்களுடைய வாழ்வை சிறப்பாக வாழ்ந்துள்ளார்கள்
இவர்கள் தங்களது உற்பத்திப் பொருட்களை பெரும்பாலும் கால்நடையாக சுமந்தும் கழுதைகளில் ஏற்றியும் வெளிமாவட்டங்களுக்கு கொண்டு சென்று பண்டமாற்று மூலம் விற்பனை செய்து தங்களுக்கு தேவையானவற்றை கொள்வனவு செய்து வருவார்கள்
இவ்வாறு தங்களது கிராமங்களிலிருந்து குழுவாகவே புறப்படும் மக்கள் கூட்டத்தினர் தங்கள் கிராமத்திற்கு திரும்புவதற்கு வாரங்கள் மதங்கள் ஆகும்
இப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் மிகச் சிறந்த கடலோடிகளாக திகழ்ந்துள்ளார்கள் இரவில் நிலவின் சாயல். நட்சத்திரங்களின் இருப்பு. போன்றவற்றை கணித்து தங்களுடைய கடல் பயணத்தை வெற்றிகரமாக முடித்து வரக்கூடியவர்கள்.
இதனால் உலக நாடுகளில் இருந்து மாதோட்ட துறைமுகங்கள் அனைத்திற்கும் கப்பல் மூலம் வியாபாரத்திற்காக வருகை தரும் வியாபாரிகளுக்கு இந்த பேசாலை மீனவர்களின் நட்பும் ஒத்துழைப்பும் முன்னைய காலங்களில் மிகவும் அவசியமாக இருந்திருக்கிறது
திசை மாறிப் போன இயற்கை சீற்றங்களால் கடலில் தத்தளித்த பல வெளிநாட்டு வியாபாரிகளையும் கப்பல்களையும் இந்த கடலோடிகள் மீட்டுள்ளார்கள் என்று கூறப்பட்ட செவி வழிக் கதைகளில் உண்மைகள் நிறையவே உள்ளன
பேசாலை மக்கள் சிறந்த உழைப்பாளிகள் ஆன்மீகத்திலும் கலை, இலக்கியம், படைப்பதிலும் சிறந்தவர்கள் பழங்காலத்தில் இப்பகுதியில் காணப்பட்ட தாழை மரங்கள் பனை ஓலைகளைப் போலவே எழுதுவதற்கு பயண்பட்டதாக கருத்துகளுண்டு இவர்களுக்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள வங்காலை, அரிப்புத்துறை, தாழ்வு பாடு, போன்ற பகுதிகளில் உள்நாட்டில் இரத்த உறவுகளாகவும் இந்தியா தமிழகத்தின் தென்மாவட்டங்களில் கன்னியாகுமரி வேளாங்கண்ணி தூத்துக்குடி போன்ற இந்தியாவிலும் இரத்த உறவுகள் இருக்கிறார்கள்
இதற்குக் காரணம் குமரிக்கண்டம் அல்லது இலெமூரியா கண்டமாக இந்த மாதோட்டம் இருந்தபோது அடிக்கடி இயற்கை சீற்றங்கள் கடல் கோள்களால் இந்த மன்னார் மாதோட்டத்தின் பல பகுதிகள் கடலில் மூழ்கி போனது அவ்வாறு மூழ்கியதில் மன்னார் நகருக்குள் இருக்கும் பேசாலை மற்றும் தலைமன்னார் கிராமங்களை சேர்ந்த இரத்த உறவுகள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் வாழத் தொடங்கியுள்ளார்கள்
அவ்வாறு மூழ்கிய பகுதிகள் சில நாட்களில் நீர் வற்றிய பின்பு மனிதர்கள் வாழ தகுதியற்ற இடங்களாக காணப்பட்டது கடல் நீரினுள் இந்த பகுதிகள் மூழ்கியதற்கான ஆதாரத்தினை பேசாலை தலைமன்னார் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளின் நில அமைப்புகளை ஆராய்ந்து பார்த்தால் அங்குள்ள நிலத் தோற்றங்கள் நீர் வற்றிய சுவடுகளுடன் மணல்மேடுகளாக காட்சியளிப்பதை வைத்து புரிந்து கொள்ளலாம் அல்லது இவற்றை உறுதிப்படுத்த நிலங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தெரிந்து கொள்ளலாம்
பேசாலை மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளில் வரலாறுகளின் அடிப்படையில் மூன்று மதங்கள் வாழ்ந்ததிற்கான இலக்கிய நூல் ஆதாரங்கள் கூறுகின்றது
மேலும் பேசாலை மண் இன்றைய தலைமுறையினர் போற்றப்பட வேண்டி ஒரு புனித பூமியாக இருக்கிறது அதற்கான காரணங்கள் பண்டைய காலங்களில் பல இருந்தாலும் இலங்கையில் ஈழப் போராட்டம் ஆரம்பித்ததன் பின்பு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பாதுகாத்து புகலிடம் கொடுத்து வாழ வைத்த ஒரு பெருமைமிகு பிரதேசமாக இந்த பேசாலை மண் காணப்படுகின்றது
1983 ஜூலை கலவரத்தின் பின் இலங்கையின் வடக்கு கிழக்கு மற்றும் மலையக பகுதிகளில் இருந்து உயிரைக் காக்க புலம்பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் இந்த பேசாலை கிராமத்திற்கு வந்து தங்கி இருந்து இந்திய தமிழ் நாட்டுக்கும் ஏனைய நாடுகளுக்கும் சென்று தங்களது உயிரையும் தங்களது தலைமுறைகளையும் பாதுகாத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அவ்வாறு யுத்தத்தில் சிக்குண்ட மக்களுக்கு பாதுகாப்பு கவசமாகவும் தங்களை பாதுகாத்துக் கொள்ளும் வழிச் சாலையாகவும் இந்த பேசாலை மட்டும் இல்லை என்றால் பல ஆயிரக் கணக்காண சிறுவர்கள் பெண்கள் உயிரிழந்திருக்க வாய்ப்புகள் உள்ளது
1983 களின் பின்னர் தொடர்ச்சியாக பேசாலை தலைமன்னர் வழியாக இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுக்கு சென்றாலும் 1990களின் பின்னர் ஏற்பட்ட யுத்தம் காரணமாக பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இந்த பேசாலை மண்ணில் தஞ்சமடைந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள் இதன் காரணத்தால் பேசாலை கிராமமானது மன்னார் நகரத்தை விட மக்கள் கூட்டம் அதிகம் வாழும் பகுதியாகவும் முக்கிய வியாபாரத் தலமாகவும் மீண்டும் மாறியிருந்தது
யுத்த காலத்தில் மன்னார் பெருநிலப்பிரப்பின் மடு தேவாலயம் வடக்கு, கிழக்கு, மலையகம், போன்ற தமிழ் மக்களுக்கு எவ்வாறு ஒரு பாதுகாப்பு அரணாகவும் அகதிகளுக்கான முகாமாகவும் காணப்பட்டதோ அதே போன்று பேசாலை பிரதேசமும் வெற்றி நாயகி ஆலயமும் இருந்தது என்றால் அது மிகையாகாது
இவை வெறும் காணொளிகளாக மாத்திரம் உருவாக்கி அதை கடந்து போவதற்கு எமக்கு விருப்பமில்லை பேசாலையின் வரலாறுகளும், அவை தொடர்பான சிறப்பியல்புகளும்,பண்டைய, தற்கால வரலாறுகளோடு இந்த பேசாலை மண் எவ்வாறு பிண்ணிப் பிணைந்துள்ளது என்பதனையும் ஆவணமாக பாதுகாக்கப்பட வேண்டும்
எனவே இவற்றை யுத்த கால இலக்கியமாக பதியப்பட வேண்டும் என்னும் நோக்கில் திரட்டப்பட்ட ஆதாரங்களில் ஒரு சில மாத்திரமே கானொளியாக வருகிறது இதை விட அதிகமான பேசாலை தொடர்பான வரலாற்றுச் சிறப்பியல்குகள் நிச்சயம் நூலாக வெளி வரும் என்னும் நம்பிக்கை உள்ளது
பேசாலை என்பது மானிட வாழ்வின் வெற்றிக்கான வழி என்றே கூற இடமுண்டு ஏனெனில் கல்வி சாலை, கலாசாலை, வாசிகசாலை, வைத்தியசாலை, நூதன சாலை, புதின சாலை ,பாடசாலை, மதுபான சாலை ,தொழிற்சாலை, இவ்வாறு மானிட வாழ்வியலின் தேவைக்கான அனைத்தும் இந்த சாலை என்னும் பெயரிலேயே அடங்கியுள்ளதை எம்மால் உணர முடிகிறது .
“பே”யம் என்றால் “மன்றம்” என்று ஒரு பொருள் உண்டு மன்றம் என்றால் கூட்டமாக கூடி பல செயற்பாடுகளை செய்து கொள்வது மன்றம் என்பதும் சாலை என்பதும் கிட்டத்தட்ட ஒன்றுதான் இப்பகுதியில் பனைமரங்கள் அதிகமாக காணப்படுவதால் மதுபானங்களை தயாரிக்கும் சாலைகளும் கள்ளினை கூடியிருந்து பருகும் மன்றச் சாலைகளும் இப்பகுதியில் இருந்துள்ளது என்பது பேசாலை இடப்பெயருக்கான மற்றொரு சான்றாகும்
அதே சாலை என்னும் பெயரை இந்த பேசாலை மண் கொண்டிருப்பது உலக படைப்பியக்கத்தில் பேசாலை மற்றும் மன்னார் என்னும் மாதோட்டத்திற்கு எவ்வளவு பங்கும் பெருமையாக உள்ளது என்பதை உலகம் உணர்ந்து கொள்ள வேண்டும்
சாலை என்பது இங்கு இடப்பெயராக காரணப்பெயராக குறியீட்டுப்பெயராக வருவது மட்டுமல்ல பல விதமான அர்த்தங்களையும் ஊகித்துக் கொள்ளலாம்.
மேலும் அறிவு,வீரம், கலை, கலாச்சாரம், பண்பாடு, வேதங்கள், மந்திரங்கள்,வாழ்க்கை நெறிகள்,வாழ்க்கைத் தத்துவங்கள், போன்றவற்றை மிகப் பெருங்கூட்டங்களாக ஒற்றுகூடி கற்றுக்கொள்வது.
அத்துடன் உணவுப் பண்டங்கள்,. வியாபாரப் பொருட்கள்,. இரும்புகள்,தங்கங்கள்,தொழில் தந்திரங்கள்,. போன்ற அனைத்தையும் ஒன்று கூடி பெற்றக்கொள்ளும் பெரிய சாலையாக அதாவது பாதை, வீதி அல்லது வழியாக இந்த பேசாலை திகழ்ந்திருக்கிறது
பேசாலை என்னும் இடப்பெயரும் அதற்கான அர்த்தங்களும் இன்றோ. நேற்றோ. வைக்கப்பட்ட பெயர் அல்ல மிகப் பழமையான காலம் தொட்டு அழைக்கப்பட்ட பெயர் எனவே இவ்வாறான சிறப்புகளோடு முன்னைய நாளில் இருந்த பேசாலை இன்று அவை மறந்தும் மறக்கடிக்கப்பட்டும் உள்ளது
இயற்கைப் பேரிடர்கள். கடற்கோள்களினால். குமரி அல்லது லெமூரியா கண்டம் அழிந்து. சிதைந்து போனதால் சிதறிய மக்கள் கூட்டம் உலகின் பல பாகங்களுக்கும் பாதுகாப்பு தேடி பிரிந்து போனார்கள்.
அங்கே புதிய மொழி,புதிய கலாச்சாரம்,பண்பாடுகளோடு ,வாழத் தொடங்கி விட்டார்கள். இதனால் குமரிக்கண்டம் எனும் தமிழர் நிலம் கலை. கலாச்சார. பண்பாடுகள். மருவி மாற்றம் பெற்று தனித்து நிற்கிறது
இன்று அதே குமரி அல்லது லெமூரிய கண்டத்தின் எச்சமாக இந்த மாதோட்டம் பேசாலை மற்றும் வடகிழக்கின் பல பகுதிகள் இருப்பது அதற்கு சான்றாக உள்ளது
பேசாலையின் பண்டைய வரலாறுகளில் இவை சிறு துளியே மிகுதி வரலாற்று நூலில் பேசப்படும் பழைய குமரிக்கண்டத்து மதுரை தூங்கா நகர்களில் மாதோட்டம் பேசாலையும் ஒன்று
நன்றி
ஊடகவியலாளர் ஜெகன்