Page Nav

HIDE

Breaking News:

latest

வாழ்க்கையில் ஒருமுறையாவது சென்று பார்க்க வேண்டிய நெடுந்தீவு சுற்றுலாத் தலம்

zஇலங்கை வடக்கு மாகாணத்தில்  மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் ' நெடுந்தீவு ' இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி வ...

zஇலங்கை வடக்கு மாகாணத்தில்  மிகச் சிறந்த சுற்றுலாத்தலமாக விளங்கும் யாழ்ப்பாணம் 'நெடுந்தீவு' இலங்கையிலும் சரி வெளிநாடுகளிலும் சரி வசிக்கும் தமிழர்கள் தங்களது வாழ்நாளில் ஒரு முறையாவது நெடுந்தீவுக்கு வந்து  பார்வையிட வேண்டும் நாம் கேள்விப் பட்டது போக கேள்விப்படாத ஏராளமான வரலாற்றுத் தொன்மைகள் இந்த நெடுந்தீக்குள் புதைந்து கிடக்கிறது 


வரலாறுகள் கூறுவது

இலங்கையின் வடபகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தென்மேற்கில் அமைந்துள்ள ஏழு தீவுகளுள் இந்த நெடுந்தீவும் ஒன்று. ஒல்லாந்தர் இத்தீவை "(Delft Island)" என்று பெயரிட்டு அழைத்தார்கள். இன்றும் ஆங்கிலத்தில் இத்தீவு இப்பெயராலேயே குறிப்பிடப்படுகின்றது. நெடுந்தீவு தலைத்தீவு பசுத்தீவு பால்தீவு அபிசேகத் தீவு தயிர் தீவு முதலான பெயர்களால் வரலாற்றுக்கு முற்பட்ட காலம் முதல் அழைக்கப்பட்டு வந்துள்ளதாக வரலாறுகள் கூறுகிறது

தொல்லியல் வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட மிகப்பரந்த கடல்  கடல்வளங்களைக் கொண்ட இந்தத்தீவுக்குள்ளும்  விவசாயம் கால்நடை வளர்ப்பு என்பது மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது 

நெடுந்தீவானது யாழ்ப்பாணத்திலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும்  இந்தியா  இராமேஸ்வரத்திலிருந்து 38 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளுர்  புங்குடுதீவு என்னும் கிராமத்திலிருந்து  10 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளதுடன் நெடுந்தீவின் சுற்றளவானது  30 கிலோமீட்டர் ஆகவும் பரப்பளவு 48 சதுரகிலோமீட்டர் ஆகவும் உள்ளது

 சிறப்பு மிக்க துறைகள்

நெடுந்தீவில்  ஆலங்கேணி பெரியான்துறை மாவிலிதுறை பூமுனை சாமி தோட்டம் வெல்லை குந்துவாடி தீர்த்தகரை ஆகிய ஊர்கள் உண்டு. இங்குள்ள மக்கள் இந்தியாவுக்கு செல்வதற்கு  பெரியதுறை என்னும் துறைமுகத்தினை பயன்படுத்துவதாக அறிய முடிகிறது 

மேலும் இங்கு வசிக்கும் மக்கள்  படகுகளில் யாழ்ப்பாணம் உட்பட வெளியடங்களுக்கு படகுப் பயணங்களையே மேற்கொள்கிறார்கள் இதையும் விட  இங்கே  மாவிலிதுறை கிழக்குதுறை தாளைத்துறை குடுவில்த்துறை குவிந்தாதுறை வெலாத்துறை ஆகிய துறைமுகங்கள் காணப்படுகின்றது.

கட்டை இனக் குதிரைகள் 

நெடுந்தீவில் கட்டை குதிரை இனங்கள் பெருமளவில் காணப்படுகிறது இங்குள்ள குதிரைகளும், கோவேறு கழுதைகளும், 1660ம் ஆண்டு முதல் 1675ம் ஆண்டு வரை வடபகுதியின் ஒல்லாந்து அரசாங்கத்தின் ஆளுநராக இருந்த 'ரிஜிக் லொஸ்வேன் கொஹென்ஸ்' இந்தத் தீவில் தங்கியிருந்தபோது இவற்றை கப்பல்கள் மூலம் இத்தீவுக்கு கொண்டு வந்து  விட்டதாக அறிய முடிகிறது மேலும்  பிரித்தானியர் ஆட்சியில் 19ம் நூற்றாண்டில் இவை 'நோலான்' என்ற பிரித்தானியரால் முறையாக வளர்க்கப்பட்டுள்ளது

வரலாற்று சிறப்புகள் 

நெடுந்தீவிலிருந்து  இக்குதிரைகளை வெளி இடங்களுக்கு  கொண்டுசெல்ல முடியாது என்ற  சட்ட  நடைமுறைகள் நெடுங்காலம்  உள்ளது அத்துடன் மன்னார் மாவட்டத்தில் உள்ளததைப் போலவே   பழமை வாய்ந்த  'பெருக்க மரங்கள்' காணப்படுகின்றன இது 'பாலோபாப்' என அழைக்கப்படுகின்றது

சுதந்திர தனி ராஜ்யம் 

போத்துக்கேயர்  ஆங்கிலேயர் போன்ற  அந்நியர் ஆதிக்கத்திற்கு முன்னர் நெடுந்தீவு ஒரு சுதந்திர தனி இராசதானி நாடாக விளங்கியதற்கான சான்றுகள் காணப்படுகிறது  'வெடியரசன்' என்னும் தமிழரசன் நெடுந்தீவின் மேற்குப்பகுதியில் கோட்டைக்காடு என்னுமிடத்தில் கோட்டை கட்டி அரசமைத்து  ஆட்சி புரிந்துள்ள ஆதாரங்களும் உண்டு வெடியரசனின் பலமான தமிழ் மன்னனின் கோட்டை இன்றும் சிதைந்த நிலையில் கல்மேடாக நெடுந்தீவின் வடமேற்குக் கரையில் காணப்படுவது அதற்கு சான்றாக விளங்குகிறது 

நெடுந்தீவில் இருக்கும் ஆலங்கேணி,  (திருக்கோணமலை பகுதியிலும் ஒரு ஆலங்கேணி இருக்கிறது) பெரியான்துறை, மாவலித்துறை,('மா' என்ற சொல்லுக்கு "குதிரை" என்ற அர்த்தம் உள்ளது எனவே குதிரைகள் ஏற்றி இறக்கியதனாலேயே மாவலி என்ற பெயர் உண்டாயிற்று) என்று பல செவி வழிக் கதகள் இருந்தாலும் "மா" என்பதற்கு இன்னும் பல அர்த்தங்கள் இருக்கிறது  

இலங்கை முழுவதும் நிலமாக இருந்து பின்னர் ஏற்பட்ட கட்ற்கோள்களினால் நிலங்கள் சிதைந்து தீவுக் கூட்டங்கள் உருவாகியதாக சங்ககால இலக்கிய நூல்கள் மூலம் அறிய முடிகிறது  அவ்வாறு நிலங்களாக இருந்த போது தென்னிலங்கை பகுதியிலிருந்து வரும் "மாவிலி கங்கை" ஆறு இப்பகுதியூடாக கடலில் கலந்திருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது

மேலும் பூமுனை, சாமித்தோட்டமுனை, வெல்லை, குந்துவாடி, தீர்த்தக்கரை, என்று ஊர்கள் உள்ளன இந்த இடப் பெயர்கள் மிகவும் பழமையான காலங்களாக பாவிக்கப்படடுள்ளது ஒவ்வொரு ஊரின் இடப் பெயர்களுக்கும்  தனியான வரலாறுகள்  உண்டு யுத்தம் உட்பட பலதரப்பட்ட காரணங்களால் அவை மறந்தும் அழிந்தும் போயுள்ளது

பெருக்குமரம்

இந்த மாவிலித் துறைமுகத்தில்  வெளிச்ச வீடு, மூன்று உருளைத் தூண்களை ஒன்றன் மேல் ஒன்றாக வைத்துக் கட்டப்பட்டதுபோல் அமைவு பெற்று அதன் மேல் கூம்பு வடிவமான ஓர் முடியும் காணப்படுவது சிறப்பாக உள்ளது  மேலும்  வெளிச்ச வீடுகளும், கப்பல் திசை மாறாது செல்வதற்கு ஒவ்வொரு வகையான ஒளிச்சமிக்ஞைகளைக் கொண்டுள்ளது.  நெடுந்தீவு இறங்கு துறையிலிருந்து கிழக்காக சுமார் 2.5 கிலோ மீற்றர் தூரத்தில் 400 வருடகாலம் பழைமையான  பெருக்குமரம் காணப்படுகிறது அதுமட்டுமல்லாது  இக்கோட்டையை அண்மித்துள்ள பகுதிகளில் மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், வட்டம் மற்றும்  சதுர வடிவமான  நாணயங்கள் என்பனவும் கண்டெடுக்கப்பட்டுள்ளன 

மன்னார் மாவட்டமும் நெடுந்தீவும் 

தலைமன்னார் பகுதியில் காணப்படும் 40 அடி மனிதர் என்று சொல்லப்படு இரண்டு கல்லறையை போலவே நெடுந்தீவிலும்  40 அடி மனிதனின்  பாதச்சுவடு  காணப்படுகிறது   தலைமன்னாரில் பாதுகாக்கப்படும் நாற்பது அடி மனிதர்கள் என்று சொல்லப்படும் இரண்டு கல்லறைகள்  மற்றும் நெடுந்தீவு  பாதச் சுட்டையும் சங்க இலக்கிய காலத் தொடு ஒப்பிட்டுப்பார்த்தால்  இலங்கை என்பது நாகர் இயக்கர் என்ற கோத்திர இனத்தவர்கள் வாழ்ந்துள்ளதை அறிய முடிகிறது இந்த நாகர் இயக்கர் மன்னார் மாவட்டத்தில் கட்டுக்கரை மாந்தை பகுதியில் பெருமளவில் வழ்ந்துள்ளதை  அங்குள்ள இடப் பெயர்கள் மூலம் ஆய்வு செய்து வெளியீடு செய்யப்பட்ட மகாவம்ச விஜயனும் மன்னார் கட்டுக்கரை பிரதேசம் என்னும் நூலில் விரிவாக கூறப்பட்டுள்ளது மன்னார் மாவட்டத்தில் காணப்படும் நெடுங்குளம் நெடுவரம்பு நெட்டாங்கண்டல்  தம்பனை பண்ணைவெட்டுவான் போன்ற இடப் பெயர்களை ஒத்ததுதான் நெடுந்தீவு  அதனால் நெடுந்தீவு நாகர்கள் இயக்கர்களின் குறியீட்டுப் பெயராகவே இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது 

சிறந்த சுற்றுலாத் தலம்  நெடுந்தீவு 

நெடுந்தீவு இலங்கையின் மிகத் தொலைதூர கிராமம் அப்பகுதியில் கடற் பயணம் மேற் கொள்வது மனதுக்கு ஓர் புதிய அமைதியைமு புதிய அனுபவத்தையும் தருவதோடு  அதிகூடிய வாகன இரைச்சல்கள் மனிதர்களின் கூச்சல் குழப்பங்கள் அழகான அமைதியான கடற்கரை  சுற்றுலாச் செல்ல விரும்புபவர்களுக்கு புதிய அனுபவங்களை நெடுந்தீவு தரும் என்பதில் சந்தேகம் இல்லை

இந்த மக்களைப் பற்றி சொல்ல வேண்டுமானால் நல்ல உழைப்பாளிகள் மண் மீதும் மொழி மீதும் பற்றுக் கொண்டவர்கள்  கடந்த கால யுத்தத்தில் பாதுகாப்பு குடிநீர் மினசாரம் போக்குவரத்து போன்றவற்றில் மிகவும் பல்வேறான சிரமங்களை எதிர் கொண்டவர்கள் இவற்றை எல்லாம் கடந்து  மண்ணின் மீது கொண்ட பற்று காரணமாக நெடுந்தீவை சிறந்த முறையில் கட்டமைத்துள்ளார்கள் ஆனாலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு பல தேவைப்பாடுகள் உள்ளது










No comments